செய்திகள் :

பொங்கள் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: ``இதுதான் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று (4.1.2026) அறிக்கை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், ``இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.

தமிழ்நாடு அரசு |TNPSC வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு |TNPSC வேலைவாய்ப்பு

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.

இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த அறிவிப்பு வெளியானபோது முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்! உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிடமாடல் அரசு!

பொங்கலோ பொங்கல்!" எனப் பதிவிட்டிருந்தார்.

மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தல்: "MP, MLAக்களின் உறவினர்கள் வென்றால் பதவி கிடைக்காது" - பாஜக உறுதி

மகாராஷ்டிராவில் வரும் 15ம் தேதி நடைபெறும் மாநகராட்சித் தேர்தலில் பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் வாரிசுகள், உறவினர்கள் போட்டியிடுகின்றனர். அது போன்ற வாரிசுகளுக்கு மாநகராட்சியில் எந்தப் பதவிய... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் மனுத் தள்ளுபடி; "தீபம் ஏற்றலாம்" - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ... மேலும் பார்க்க

திருப்பத்தூர் தொகுதி: அமைச்சர் பெரியருப்பனை எதிர்த்து இலங்கை எம்.பி-யின் மாமனாரா?

அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக இலங்கை எம்.பி-யின் மாமனாரைக் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகப் பரவி வரும் தகவல் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அமைச்சர் பெரியகருப்பன்சிவகங்கை திமுக மாவட... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: 'மேயராக்குவதாக கூறி போட்டியிட வைத்தனர், ஆனால்...'- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. தேர்தல் சமயத்தில் முன்னாள் டி.ஜி.பி-யும், கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அத... மேலும் பார்க்க

DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா... தேர்தல் நேர எதார்த்தமா?'

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது என்ற நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் தொடர் படையெடுப்பும், மாநிலக் கட்சிகளின... மேலும் பார்க்க