செய்திகள் :

BB Tamil 9: "பார்வதி சாண்ட்ராவை எட்டி உதைக்கும்போது கமருதீன் தடுத்திருந்தால்.." - பிரஜின் பேட்டி

post image

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 பரபரப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கின்போது பார்வதி, கமருதீன் இருவரும் சாண்ட்ராவிடம் நடந்து கொண்டது பேசுபொருளானது.

பலரும் அவர்களுடைய கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டார்கள். இது தொடர்பாக பிக்பாஸ் தமிழ் 9 போட்டியாளரும், சாண்ட்ராவின் கணவருமான பிரஜினைச் சந்தித்துப் பேசினோம்.

சாண்ட்ரா
சாண்ட்ரா

"ஒரு விளையாட்டை விளையாட்டா ஆடணும். தப்பா விளையாடினதால மட்டும்தான் அவங்களுக்கு ரெட் கார்டு கொடுத்தாங்க. ரெட் கார்டு இருக்கிறதுலேயே ரொம்ப மோசமான ஒரு விஷயம். நீங்க திரும்ப செலிபரேஷனுக்கு வர முடியாது! சிலர் சம்பளம் கிடைக்கும்னு சொல்றாங்க, கிடைக்காதுன்னும் சொல்றாங்க. அதைப் பத்தி எதுவும் நமக்குத் தெரியல.

கார் டாஸ்க் அப்படிங்கிறது ஒரு சின்ன கார்ல ஒன்பது பேர் எவ்ளோ நேரம் உட்கார்ந்து இருக்கிறாங்கங்கிறதுதான். உட்கார்ந்து சில விஷயங்கள் பார்வதி பண்ணியிருப்பாங்க. ஆரம்பத்திலேயே டிரிகர் பண்ணி, கமருதீன் உள்ள வந்து ஃபேமிலியை இழுத்து ரொம்ப தரக்குறைவா பேசியிருப்பாங்க. என்னதான் டிரிகர் பண்ணியிருந்தாலும் அவ்ளோ மோசமா பேசியிருக்க தேவையில்ல.

ஒரு வேளை இது இந்தி பிக்பாஸ் ஆக இருந்தா இதைப் பெருசா எடுத்திருக்க மாட்டாங்க. ஆனாலும் ஒரு பொண்ணை ரெண்டு பேர் சேர்ந்து எட்டி உதைக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய தப்பு. பிளான் பண்ணி பண்ண விஷயம் இது. எட்டி உதைச்சிட்டு இல்லைன்னு வேற சொல்றாங்க. அப்ப பார்க்கிற ஆடியன்ஸ் என்ன முட்டாளா?

விழுந்ததும் பேனிக் அட்டாக்தான் அது வலிப்பு இல்ல. ஃபிட்ஸ் வேற, பேனிக் அட்டாக் வேற! ஒருத்தரை உட்கார வச்சு லாக் பண்ணி பல தகாத வார்த்தைகள் பயன்படுத்திட்டாங்க. அவர் சொன்ன வார்த்தைகள் ரொம்ப தப்பு. எனக்கு அவர் மேல ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு.

கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். அவங்க பேச்சைக் கேட்டுட்டு இந்த விஷயத்தைப் பண்ணி அவர் லைஃப்பை அவரே இது பண்ணிட்டாரு. ரெண்டு பேருமே அவங்க கண்ட்ரோல்ல இல்ல.

பார்வதி, கமருதீன்
பார்வதி, கமருதீன்

சாண்ட்ராவுக்குக் கடந்த காலத்தில் நிறைய டிராமா இருந்திருக்கு. அவங்களுக்கு வீட்ல இது மாதிரி ஒரு முறை நடந்திருக்கு. அதிர்ச்சியில் நடந்ததுதான் அந்த பேனிக் அட்டாக். எனக்கு நைட் 2 மணிக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க.

இப்ப அவங்க ஓகேவா இருக்காங்கன்னும் சொன்னாங்க. டிவியில் நீங்க பார்த்த வெர்ஷன் கிடையாது நடந்தது. இதை விட சில விஷயங்கள் நடந்திருக்கு. அதை டிவியில் காட்ட முடியாது. அந்த அளவுக்கு மோசமா நடந்திருக்காங்க. எனக்குத் தெரிஞ்ச அதனால சில விஷயங்கள் எடிட் செய்யப்பட்டிருக்கு.

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை விட்டுட்டு சபரி, வினோத் இறங்கினது பெரிய விஷயம். அவங்க எல்லாருக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன். அதுதான் மனிதாபிமானம்னு சொல்றது" என்றவரிடம், "சோசியல் மீடியாவில் சாண்ட்ரா நடிக்கிறாங்கன்னு ஒரு பக்கம் அவங்களைப் பத்தி வீடியோக்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டுட்டு இருக்கே?"னு கேட்டோம். 

ரெட் கார்டு
ரெட் கார்டு

"அவங்க ரெண்டு பேரும் வெளியில வந்துட்டாங்க அடுத்து வேற என்ன பண்ண முடியும். பிஆர் டீம் வச்சு இதுதான் பண்ண முடியும். பயத்துல வர்றதுதான் பேனிக் அட்டாக். அவங்க பண்ணதுல சாண்ட்ரா ரொம்ப பயந்துட்டாங்க. அதனாலதான் கமருதீன் மன்னிப்பு கேட்க வரும்போதும் அவங்க பயந்து கத்தியிருப்பாங்க.

பார்வதி வந்தப்ப அங்கிருந்தே போயிருப்பாங்க. பயந்த ஆட்கள் எப்ப பார்த்தாலும் பயந்துட்டேதான் இருப்பாங்க. இப்ப கமருதீன் இடத்துல நான் இருந்தாலும் எனக்கும் அப்படித்தான் தோணியிருக்கும். என்ன இது ஓவரா பண்றாங்கன்னு எனக்கும் எதுவும் புரிஞ்சிருக்காது.

உங்களுக்கெல்லாம் அது ஆக்டிங் ஆகத்தான் தெரியும். ஆனா, அடுத்து நீங்க வந்து என்ன பண்ணப் போறீங்கன்னு தெரியலையேங்கிற பயத்துல நடக்கும்போது ஒண்ணும் பண்ண முடியாது. 

தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிக்காம தப்பு பண்ணிட்டு, பின்னாடி யோசிக்கிறதனால எந்தப் பயனும் இல்ல. பார்வதி வீட்டைவிட்டு வெளியே போனப்ப யாரும் வந்திருக்க மாட்டாங்க. வீட்டுக்குள்ள நானும் அவங்க ரெண்டு பேர்கிட்ட சொல்லியிருக்கேன். 'உண்மையாகவே லவ் பண்றீங்கன்னா நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் வாழ்த்த வர்றேன்'னு சொல்லியிருந்தேன்.

டிரிகர் செய்யப்படாமல் கமருதீன் இருந்திருந்தா கண்டிப்பா டாப் 5ல இருந்திருப்பான். இப்பவும் எனக்கு பார்வதி மேலேயும், கமருதீன் மேலேயும் கோபம் இல்ல. அவங்க ரெண்டு பேரும் வெளியில போயிட்டு நல்லா இருக்கட்டும். அவங்க பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டாங்க. இப்ப வெளியில வந்து மக்களை எப்படி சந்திக்கப் போறாங்கங்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கும்.

ஒருவேளை பார்வதி எட்டி உதைக்கும்போது இவன் தடுத்திருந்தா அந்த இடத்துல இவன் ஹீரோ ஆகியிருப்பான். அவன் பண்ணது எனக்கே கஷ்டமாகத்தான் இருந்துச்சு. ஏன் அப்படி நடந்துக்கிட்டாங்கன்னு எனக்குத் தெரியல. 

பார்வதி
பார்வதி

என்னோட ஒரு குழந்தைக்கு பார்வதியை ரொம்பப் பிடிக்கும். ஷார்ட்ஸ் பார்க்குறப்ப அவங்க இந்த விஷயத்தைப் பார்த்துட்டாங்க. பார்த்துட்டு என்கிட்ட, "ஏன் அச்சா பார்வதி ஆண்ட்டி அம்மாவை கார்ல இருந்து கிக் பண்ணி தள்ளிட்டாங்க"னு கேட்டாங்க. நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சேன்.

நான் அவங்களை பிக்பாஸ் பார்க்க விடுறது இல்ல. "பார்வதி ஆண்ட்டி பேட்ல அச்சா"னு சொன்னாங்க. இன்னொரு குழந்தை அழுதுட்டாங்க. இது கேம்னு சொல்லி ஏதோ சமாளிச்சு ஏமாத்துனேன். மனசுல வச்சுக்க மாட்டாங்க மறந்துடுவாங்க" என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து பிரஜின் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?

‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன்.‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிர... மேலும் பார்க்க

`'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அன... மேலும் பார்க்க

BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க