Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
BB Tamil 9: "நீ இங்க இருந்த 33 நாளும் பயாஸ்ட்டாதான் நடந்துகிட்ட" - பிரவீன், வினோத் வாக்குவாதம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 92 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.
கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இன்று திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர்.
இன்று வெளியான புரொமோவில் பிரவீன் ராஜ், "கேம்மை ஜெயிக்கணும்னு நினைச்சதுனால, உங்களுக்கு நீங்க உண்மையா இல்ல. உங்களுக்குள்ள இருந்த அந்த மனிதாபிமானத்தை இழந்துடீங்க" என விக்ரமைச் சாடுகிறார்.
"இப்போ எங்க எல்லாரையும் சொல்ற நீயே இதைத்தான் இங்க பண்ணிட்டு இருந்த. நீ இங்க இருந்த 33 நாளும் பயங்கர பயாஸ்ட்டா நடந்துகிட்ட. எல்லார் பின்னாடியும் பேசிட்டுதான் இருந்த" எனப் பிரவீன் ராஜிடம் வினோத் வாக்குவாதம் செய்கிறார்.

"நான் 33 நாள்-ல சம்பாரிச்ச விஷயங்களை இங்க 90 நாள் இருந்த நீ சம்பாதிச்சிருக்கியான்னு தெரியல" எனப் பிரவீன் ராஜ் வினோத்திடம் சொல்கிறார்.



















