Vijay: '''நம்மள கலாய்ச்சிட்டாங்க, அதனால அதைப் பண்ண வேண்டாம்'னு விஜய் சொன்னார்"- ...
BB Tamil 9: "சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க?" - கேள்வி எழுப்பும் பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.
கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் ரம்யா, அப்ஷரா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
வெளியேறிய நபர்கள் உள்ளே இருக்கும் இந்த நபர்களை விட நான் இங்கு ((பிக் பாஸில்) இருப்பதற்கு தகுதி ஆனவர் தான் என்று சொன்னால் யாரை சொல்லுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு "நான் பார்த்த சாண்ட்ரா நீங்க கிடையாது. உங்களை விட நானே பெட்டர்" என ரம்யா சாண்ட்ராவின் பெயரை சொல்கிறார்.

அதேபோல "டாப் 6 வருகிற அளவுக்கு அவங்க எதுமே பண்ணல" என அப்ஷராவும் சாண்ட்ராவை சொல்கிறார். "எப்படி இவ்வளவு தூரம் வந்தன்னு எனக்கு இன்னும் ஷாக்கா தான் இருக்கு" என அரோராவை பிரவீன் ராஜ் சொல்கிறார். தவிர "நீ எப்படி இந்த டாப் 6-ல வந்த" என வியானா சபரின் பெயரை சொல்கிறார்.






















