Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் அசைவம் சாப்பிடக் கூடாதா?
Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்கல் ரிலீஸ் என்னென்ன?
பண்டிகை தேதிகளில் வெளியாகும் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அப்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்குப் பல திரைப்படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கின்றன.
தமிழ், தெலுங்கு என ரசிகர்களுக்கு டிரீட் கொடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படைப்புகளும் இந்தப் பண்டிகைக்குத் திரைக்கு வருகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா...
தமிழ்:
பராசக்தி:
சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
ரவி மோகன் வில்லனாகக் களமிறங்கியிருக்கும் திரைப்படம், ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் திரைப்படம் எனப் பலருக்கும் இந்த 'பராசக்தி' ஒரு மைல்ஸ்டோன் திரைப்படமாக வரவிருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படம் 1960களில் நிகழ்ந்த மொழிப் போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
(தணிக்கை சான்றிதழ் பெறுவது தொடர்பான வழக்கில் ஜனவரி 9-ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்படுவதால், ஜனவரி 9 அன்று திரைக்கு வருவதாக அறிவித்திருந்த 'ஜன நாயகன்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.)

தெலுங்கு:
தி ராஜா சாப்:
பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தி ராஜா சாப்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தத் தெலுங்கு திரைப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் மாருதி இயக்கியிருக்கும் இப்படம் ஹாரர் காமெடி படமாகத் தயாராகியிருக்கிறது.
மன ஷங்கர வர பிரசாத் காரு:
டோலிவுட் இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தின் மற்றொரு பொங்கல் ரிலீஸ் இந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு'.
கடந்தாண்டு இவர் இயக்கத்தில் திரைக்கு வந்திருந்த 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்' திரைப்படமும் சூப்பர் ஹிட்டடித்திருந்தது.
சிரஞ்சீவி, நயன்தாரா, வெங்கடேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்த டாலிவுட் படம் 12-ம் தேதி திரைக்கு வருகிறது.

பர்தா மஹாசாயுலகி விக்ஞாப்தி:
இயக்குநர் கிஷோர் திருமலை இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகியிருக்கும் 'பர்தா மஹாசாயுலகி விக்ஞாப்தி' சங்கராந்தி டிரீட்டாக திரைக்கு வருகிறது.
இத்திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி திரைக்கு வருகிறது.
அனகனக ஒக்க ராஜு:
நவீன் பொலிஷெட்டி, மீனாட்சி சௌத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த 'அனகனக ஒக்க ராஜு' திரைப்படம் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது.
இதில் எந்தப் படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்?




















