Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் மனுத் தள்ளுபடி; "தீபம் ஏற்றலாம்" - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில் இன்று ( ஜன.6) திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தெரிவித்திருந்தது.
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர்.

"தீபம் ஏற்றும் இடத்தை தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யலாம். பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது ஏற்கத்தக்கது அல்ல" என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

















