செய்திகள் :

'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

post image

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது. மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக வலியுறுத்த, தனிச்சின்னத்தில் நிற்க வேண்டுமென மதிமுக நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

மதிமுக உயர்நிலைக் குழு
மதிமுக உயர்நிலைக் குழு

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மதிமுகவியின் உயர்நிலை குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்திருந்தது. கூட்டணி குறித்து முக்கிய முடிவை எடுக்க கூடிய இந்த கூட்டத்துக்கு வருகை தந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, 'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்' என கூறிவிட்டு சென்றார்.

அவர் பேசியதாவது, 'கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் நான் இல்லை. ஆனால், எங்கள் தரப்பினர் மதிமுகவின் விருப்பத்தை திமுகவிடம் தெரியப்படுத்தயிருக்கிறார்கள். திமுக அவர்களின் சூழ்நிலையை எங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். எங்களின் கூட்டணி ஏற்கனவே வலுவாக இருக்கிறது. இப்போது மேலும் சிலர் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள்.

துரை வைகோ
துரை வைகோ

மதவாத சக்திகளுக்கு எதிரான பொதுவான கருத்தோடு எல்லாரும் இணைந்திருக்கிறோம். கூட்டணியில் எங்களால் பிரச்னை ஏற்படாது. இயக்கத்தின் நலனை விட தமிழகத்தின் நலனை முக்கியம். சில விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் தாமதமும் இல்லை' என்றார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்தாலும், துரை வைகோ அதனை விரும்பவில்லை என்றும், கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தனிச்சின்னத்தின் தான் நிற்க வேண்டும் எனவும் துரை வைகோ வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், துரை வைகோவின் தற்போதைய கருத்து, மதிமுக, வரும் தேர்தலில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரி்விப்பதாக உள்ளது.

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ந... மேலும் பார்க்க

கோவை: அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - அதிர்ச்சி பின்னணி!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்துள்ளது. இதை அறியாமல் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ... மேலும் பார்க்க

10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். ஆனாலும், 12 நாள்களாகப்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" - பியூஸ் கோயலின் பதில் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'த... மேலும் பார்க்க