செய்திகள் :

`கணவரை குணப்படுத்துவார் என நினைத்தேன்' - திருநங்கை வேடத்தில் வந்து விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை

post image

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த கட்டடத்திற்கு திருநங்கை வேடத்தில் ஒருவர் வந்தார். அந்த நபர் விடுதியின் வெளியில் நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் பேச்சுக்கொடுத்து அவரது நம்பிக்கையை பெற்று அந்த கட்டிடத்திற்குள் சென்றார். அந்த திருநங்கை விடுதியில் இருந்த ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி யாசகம் கேட்டார். அப்போது விமானப் பணிப்பெண் இருந்த அறை கதவை திருநங்கை தட்டினார்.

விமானப்பணிப்பெண் கதவை திறந்தார். அவரிடம் திருநங்கை பேச்சுக்கொடுத்தார். இதில் விமானப் பணிப்பெண்ணின் கணவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பது தெரிய வந்தது. உடனே அப்பெண்ணிடம் உனது கணவருக்கு கெட்ட ஆவி பிடித்திருக்கிறது. அதனை தன்னால் விரட்ட முடியும் என்று தெரிவித்தார்.

இதனை விமானப் பணிப்பெண் நம்பினார். உடனே அந்த திருநங்கையை தனது வீட்டிற்குள் விமான பணிப்பெண் அனுமதித்தார். அப்போது உள்ளே நுழைந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரிடம் ரூ.200 வாங்கிக்கொண்டு திருநங்கை வெளியில் தப்பிச்சென்றுவிட்டார்.

திருநங்கை என்ற பெயரில் விமானப்பணிப்பெண் வீட்டிற்குள் வந்தது ஒரு ஆடவர் என்று பின்னர் தெரிய வந்தது. இது குறித்து விமானப்பணிப்பெண் போலீஸில் புகார் செய்தார். அவர் கொடுத்துள்ள புகாரில், ஆஸ்பத்திரியில் இருக்கும் என் கணவரை குணப்படுத்திவிடுவார் என்று நினைத்து திருநங்கையை எனது பிளாட்டுக்குள் நுழைய அனுமதித்தேன். அந்த நபர் என் மீது தண்ணீர் தெளித்து தலையில் கை வைத்து ஹிப்னாடிஸ் செய்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

100 கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிப்பு


போலீஸார் உடனே வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பெண் வசித்த கட்டடத்திற்கு வெளியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது திருநங்கை வேடத்தில் ஒருவர் ஆட்டோ ஒன்றில் ஏறிச்செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ சென்ற இடத்தை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் அனில் ஷிண்டே என்று தெரிய வந்தது.

அவர் மும்பை அருகில் உள்ள கல்வா குடிசைப்பகுதியில் தங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்ட அனில் ஷிண்டேயை கைது செய்ய பவாயில் சம்பவம் நடந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்து கல்வா வரை 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அவரது நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட்ட நான்கு மணி நேரத்தில் ஷிண்டே கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. அனில் ஷிண்டே மீது பில்லிசூனியம் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரித்தபோது தனது குடும்பம் திருநங்கை வேடத்தில் யாசகம் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க