செய்திகள் :

கன்னியாகுமரி கடலில் குதித்து கேரள சகோதரிகள் தற்கொலை; திருமணம் ஆகாதது காரணமா? போலீஸ் விசாரணை!

post image

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் பிலிப். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு எலிசபெத்பிலிப், ஆனிபிலிப் (35), மீராபிலிப் (32) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இதில் எலிசபெத்பிலிப் திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார். ஆனிபிலிப் மற்றும் மீராபிலிப் இருவரும் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை சொந்த ஊரான கோட்டயம் செல்வது வழக்கம். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த இருவரும் ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 26-ம் தேதி மாலை கன்னியாகுமரிக்கு வந்தனர். அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தனர்.  இருவரும் வெளியே சென்ற நிலையில் லாட்ஜிக்கு திரும்பவில்லை. இரண்டு நாட்களாகியும் லாட்ஜுக்கு திரும்பாததால் லாட்ஜ் ஊழியர்கள் அவர்கள் கொடுத்த மொபைல் நம்பரில் தொடர்பு கொண்டு அவரது தாயாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாயமான பெண்களின்  தந்தை பிலிப்பின் அண்ணன் ஷீஷ என்பவரும் அவரது உறவினரும் கன்னியாகுமரிக்கு வந்து மாயமான சகோதரிகளை பல இடங்களை தேடினர். இருவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால்  கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் எஸ்ஐ வினிஸ் பாபு தலைமையிலான போலீசார், வழக்கு பதிவு செய்து மாயமான சகோதரிகளை  தேடி வந்தனர்.

மீட்கப்பட்ட உடல்கள்

இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள சி.சி.டி.வி காட்சியின் அடிப்படையில் மாயமான இரண்டு சகோதரிகளையும் போலீஸார் தீவிரமாக  தேடி வந்தனர். இதற்கிடையே அவர்களது உடல்கள் கன்னியாகுமரி வாவத்துறை கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரிக்கு அனுப்பிய மெசேஜில், "எங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றி. உங்களை நாங்கள் சிரமப்படுத்த விரும்பவில்லை. எங்களது உடலை கன்னியாகுமரியில் அடக்கம் செய்யுங்கள்" என குறிப்பிட்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள்

இது குறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் கூறுகையில், "கன்னியாகுமரியில் மாயமான பெண்கள் இருவரும் 26-ம் தேதி மாலை வாவத்துறையில் உள்ள தூண்டில் வளைவு பாலத்தில் நடந்து செல்லும் காட்சிகள் சி சி.டி வி கேமராக்களில் பதிவானது. ஆனால் இருவரும் மீண்டும் கரை திரும்பும் காட்சிகள் இடம்பெறவில்லை. எனவே இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில்  தேடி வந்தோம். இந்நிலையில் இருவரது உடல்களும் கரை ஒதுங்கியுள்ளன" என்றார். தற்கொலை செய்து கொண்ட இரண்டு பெண்களும் அமெரிக்காவில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து வந்துள்ளனர். ஆனால் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறு பிரச்சினையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணனையும் தாயையும் கொன்று சாணக் குழியில் புதைத்த கொடூரம்; ஆட்டோ டிரைவர் சொன்ன தகவலால் சிக்கிய தம்பி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பச்சடி கிராமத்தில், ரெஜி (54), அவரது தம்பி சஜி (43) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் மேரி (71) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக வீட்டு வேலைகளையும், விளைபொரு... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - விலை உயர்ந்த பைக்கால் சிக்கிய இளைஞர்கள்

சென்னை, வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, வேலை முடந்து வீட்டிற்கு செல்ல வேளச்சேரி, நேரு நக... மேலும் பார்க்க

புதுச்சேரி: சாக்லேட் ஆசை காட்டி 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தீர்ப்பும் வழக்கின் பின்னணியும்

வழக்கின் பின்னணிபுதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்துச்சென்று ரத்தத்தை உறிஞ்சி விற்பனை; கால்நடை மருத்துவர் மீது பகீர் புகார்

பொதுமக்கள் நாய்கள் உட்பட வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக அன்பு மற்றும் பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்புப் பிராணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் மனவ... மேலும் பார்க்க

பிஞ்சு உயிரைக் கொன்ற வன்கொடுமை: `மறைக்க முயன்ற அதிகாரிகள்; தூங்கும் காவல்துறை' - பியூஷ் மனுஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த டிசம்பர் 11, 2026 அன்று இரண்டரை வயது பட்டியலினக் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச்... மேலும் பார்க்க

Meghalaya Honeymoon Murder: கணவனைக் கொன்ற மனைவிக்கு ஜாமீன்; 11 மாதங்களுக்குப் பிறகு வெளியே வருகிறார்

கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்சி என்ற பெண் திருமணமானவுடன் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். அவர்கள் மே 11ம்தேதி திருமணம் செய்த பிறகு 20ம... மேலும் பார்க்க