செய்திகள் :

'கரப்பான்பூச்சிகளுடன் மோதாதீர்கள்; நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!' - ராஜினாமா பற்றி அபிஜித் தீப்கே

post image

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இது நமக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது குறித்து சி.ஜே.பி-யின் நிறுவனர் அபிஜித் தீப்கே, "இதுதான் ஜனநாயகம். அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் சும்மா போக மாட்டோம்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்.

அந்த குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இரண்டாவதாக, கடந்த 20-ம் தேதி அராஜகம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அந்த போலிஸ் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், 'காக்ரோச்' உடன் மோதாதீர்கள்."

'திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?' - குமுறும் விசிக தொண்டர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 'ஷாநவாஸிடம் கட்சித் தலைவர் திருமா விளக்கம் கேட்க... மேலும் பார்க்க

கேரள முதல்வர் தொடங்கி வைத்த விழிஞ்சம் சர்வதேச துறைமுக (EXIM) வர்த்தகம் - பிரத்யேக புகைப்படங்கள்!

கேரள முதல்வர் தொடங்கி வைத்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் (EXIM) வர்த்தகம்.! பிரத்யேக புகைப்படங்கள்.! மேலும் பார்க்க

கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" - மு.க. ஸ்டாலின்

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்ந... மேலும் பார்க்க

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை அறிதல்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

அரசு தொடக்க, நடுநிலை, அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை அறிய பள்ளிக் கல்வித்துறையிலிருந்து உத்தரவிடப்பட்ட... மேலும் பார்க்க

`அதுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காம... இதுக்கு கைது பண்ணிட்டாங்க!' - உதயநிதி ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது நடந்தது குறித்தும், தவெக அரசை விம... மேலும் பார்க்க

சேலம்: 80 வது சுதந்திர தின விழாவின் கோலாகலமான கொண்டாட்டம்! | Photo Album

சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட... மேலும் பார்க்க