செய்திகள் :

கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

post image

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

''தலைமை நீதிபதி சூர்யா காந்த் எங்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று அழைக்கவில்லை என்றால், நான் இந்தியா வந்திருக்க மாட்டேன். இந்த மிகப்பெரிய இயக்கமும் தொடங்கியிருக்காது. அதற்கு அவருக்கு என் நன்றிகள்'' என அபிஜித் தீப்கே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் ‘பார் அண்ட் பெஞ்ச்’ (Bar and Bench) ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், ``என் பேச்சு முற்றிலும் தவறான சூழலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. போலிச் சான்றிதழ்கள் மூலம் சட்டத் தொழிலுக்குள் நுழைந்த நபர்களைப் பற்றிய விவாதத்தின்போதே நான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

நாட்டில் சுமார் 48,000 நபர்கள் கல்லூரிக்கே செல்லாமல், போலிச் சான்றிதழ்கள் மூலம் வழக்கறிஞர்களாக உலா வருகிறார்கள். சட்ட அமைப்பிற்குள் புகுந்து சீர்கேடு விளைவிக்கும் இத்தகைய போலி வழக்கறிஞர்களைப் பற்றியே நான் 'கரப்பான் பூச்சிகள்' எனக் குறிப்பிட்டேனே தவிர, நாட்டின் இளைஞர்களைப் பற்றி அல்ல.

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மனு ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்று நான் தொடர்ந்து பதிவாளரிடம் கேட்டறிந்தேன்.

சூர்யகாந்த்
சூர்யகாந்த்

ஆனால் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மனுவே தாக்கல் செய்யப்படாத நிலையில், ஒருவர் அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதனால் தான் 'நேரத்தை வீணடிக்காதீர்கள்' என்று கூறினேன். நீதிமன்றம் அனைவருக்கும் திறந்தே உள்ளது. மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரிக்க மறுக்கப்போவதில்லை.

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்யும் இந்த டிஜிட்டல் காலத்தில், செய்திகளை வெளியிடுவதற்கும் அறிக்கை செய்வதற்கும் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குக் கர... மேலும் பார்க்க

'நீட் கலந்தாய்வில் தவறாகத் தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு' - உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் ஓசிஐ (OCI) அட்டை உள்ளது. நீட் யூஜி 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். ... மேலும் பார்க்க

பழனி நிலமோசடி விவகாரம்: "அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்"- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர்நீத... மேலும் பார்க்க

'தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா?' - வேதாந்தா நிறுவனத்தின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி 2018-ம் ஆண்டு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் 100வது நாளான மே... மேலும் பார்க்க

நீட் போராட்டத்தில் போலீஸாரின் செயல்: `சட்டம் தன் கடமையைச் செய்யும்' - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது!அமைதியான வழியில் போராடநீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தியதாக... மேலும் பார்க்க

"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" - டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் ப... மேலும் பார்க்க