செய்திகள் :

கரூர்: திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; தவெக நிர்வாகி மீது புகார்; கனிமொழி கண்டனம்

post image

கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண். இவர், மெடிக்கலில் பணிபுரிகிறார். நேற்று இரவு, 7 மணிக்குப் பணி முடிந்து தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிழக்கு ஒன்றிய த.வெ.க., செயலர் ரமேஷ், பைக்கில் பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் நிலை தடுமாறி, பெண்கள் இருவரும் விழுந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், ரமேஷுக்குத் தர்ம அடி கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

அந்தப் புகாரில், கடந்த 3 மாதங்களாக த.வெ.க நிர்வாகி ரமேஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை விசாரணை நடத்துவதாகத் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``குளித்தலை அருகே இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணைக் கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் த.வெ.க ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தூத்துக்குடி: 10 சவரன் தங்க நகைக்காக பெரியம்மாவைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலாபுரத்தைச் சேர்ந்தவர் திருக்கண்ணன் என்பவரின் மனைவி கலாவதி. இவர், சத்துனவு திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரு மகன்... மேலும் பார்க்க

ரூ.15 கோடி'பொருள்' - பங்கு பிரிப்பதில் மோதல்; சிவகங்கையில் சிக்கிய சர்வதேச குருவிகள்!

சிக்கிய 4 'குருவிகள்'!சிவகங்கையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.100 கிலோ 'மெத்தாம்பேட்டமைன்' என்ற பயங்கர போதைப்பொருளைப் பறிமுதல் செய்த சிவகங்கை நகர் காவல்துறையினர், இது தொடர்பாகப் பதுங்கியிருந்த... மேலும் பார்க்க

கோவை: சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - கிராம மக்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், அரிசி பாளையம் மூலக்கடை வீதியைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் தனது வளர்ப்பு நாயுடன் வி.கே.சி கம்பெனி அருகே இன்று காலை வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு குழந்தையின் அ... மேலும் பார்க்க

3 வயது சிறுமி வன்கொடுமை: அபராத பணத்தில் மது விருந்து வைத்த கிராம பஞ்சாயத்து - அதிர்ச்சி சம்பவம்!

நவீன இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்தாலும், சில கிராமங்களில் இன்னும் காட்டுமிராண்டித்தனமான செயல்களும், பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் அநீதிகளும் தொடர்கின்றன என்பதற்கு ஜார்கண்ட் மாநி... மேலும் பார்க்க

"என்னைத் தூக்கிலிடுங்கள்; நான் காந்தி அல்ல" - ஒரே குடும்பத்தில் மூவரைக் கொன்ற குற்றவாளி திமிர் பதில்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாறா போத்துண்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை (61). செந்தாமரையின் மனைவி சில ஆண்டுகளுக்குமுன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அதற்கு பக்கத்து வீட்டுக்காரர்களான... மேலும் பார்க்க

குமரி லாக்கப் மரணம்: "சாத்தான்குளம் வழக்கைப் போன்று உள்ளது" - மாற்றுத்திறனாளியின் உறவினர்கள் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரி வர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டுக்கு அருகில் கடை வைத்திருந்தார். இவர் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொர... மேலும் பார்க்க