கௌரி கிஷன் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாத...
கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!
கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சண்முகம் மீது நண்பர்கள் பீர் பாட்டினால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சண்முகம் அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று உள்ளார். ஆனால், அப்போது மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.

இந்த தகவலை அறிந்து அங்கு வந்த லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, இந்த கொலையை அரங்கேற்றிய விக்கி (வயது: 21) என்பவரை பிடித்து முதலில் விசாரணை நடத்தினர். அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், மேலும் தலைமறைவாக இருந்த சசிகுமார், சுஜாஸ், லிவிஸ், அன்பரசன் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை ஐந்து பேர் பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.













