செய்திகள் :

கரூர்: விவசாயி மீது நாட்டு துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு; 'நிலப் பிரச்னையா?' - போலீஸ் விசாரணை

post image

கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் கருணகிரி (48). விவசாயத் தொழிலாளியான இவர் நேற்று (மே 22) இரவு 9.45 மணியளவில் வளையப்பட்டியில் காட்டுப் பகுதியில் தனது களத்து வீட்டில் உள்ள அவரது சித்தப்பாவுக்கு உணவு கொடுக்க இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்றுள்ளார்.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு

அப்போது, களத்து வீட்டின் அருகே பள்ளத்தில் சென்றபோது, பின்னால் மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் முதுகில் இடுப்பில் துப்பாக்கிச் சூட்டால் பலத்த காயத்துடன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்குச் சென்று, வலி தாங்க முடியாமல் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.

அவரது உடம்பில் 10 பால்ரச குண்டுகளால் சுடப்பட்டது தெரியவந்தது. மேலும் தொடர் சிகிச்சை விவசாயிக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து, பாலவிடுதி போலீசார் இன்று மே 23 ஆம் தேதி காலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதல் கட்ட விசாரணையில், நிலப் பிரச்னையில் முன் விரோதம் காரணமாக, சந்தேகத்தின் பேரில் அவரின் உறவினர்கள் 4 பேரைப் பிடித்து, பாலவிடுதி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க