செய்திகள் :

கர்நாடகாவிலிருந்து டூவீலரில் குட்கா பொருள்கள் கடத்திவந்த நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ்!

post image

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருள்களை அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குட்கா, பான் மசாலா (ஃபைல் படம்)

அதே நேரம், இவர்கள் மீதான கண்காணிப்பையும் காவல்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறையினர் இவர்களை குறிவைத்து பிடித்து சிறைக்கு அனுப்புவதும் தொடர்கிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்.ஐ அன்பழகனுடன் காவல் குழுவினர் நேற்று சேலம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஷாகித் அன்வர் என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஷாகித் அன்வர்

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன் சகோதரருடன் சேர்ந்து தமிழ்நாட்டில தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பெங்களூரிலிருந்து வாங்கி வந்து கிருஷ்ணகிரியிலுள்ள வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மொத்தம் 336.434 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பொருள்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2,45,045 ஆகும்.

இக்குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு பாஷித் அன்வர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைக்காக உணவு பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பொருள்களை பதுக்கி விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் காதல், திருமணம்... மனைவி, மாமியார் என 2 பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த 21 வயதான பூவரசி என்ற இளம்பெண் திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷ்ய் என்ற 25 வயது இளைஞரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்திருக்கிறார். கடந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க புகார்

தூத்துக்குடியில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 8-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகத்திலேயே வறட... மேலும் பார்க்க

சர்ச் நிர்வாகம் யாருக்கு? ஆர்த்தடாக்ஸ் - யாக்கோபாய பாதிரியார்கள் மோதல்; 22 பேர் மீது வழக்கு

கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினருக்கும், யாக்கோபாய பிரிவினருக்கும் இடையே சில சர்ச்களை நிர்வகிப்பது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருகிறது. சில சர்சுகள் சம்பந்தமாக கோர்ட்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஆற்காடு இளைஞனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15-12-2019 அன்று 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டார். இது சம்பந்தமாகப் பதியப்பட்ட போக்சோ வழக்கில் சிலம்ப... மேலும் பார்க்க

கும்பகோணம்: காரில் ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரம்; பாஜக நிர்வாகியைக் கைதுசெய்த போலீஸ்!

கும்பகோணம், சத்யம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வேதா என்கிற வேதச்செல்வம் (52). இவர் பாஜக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையி... மேலும் பார்க்க

'கொள்ளிடம் பாலத்தில் எல்லை மீறும் ஜோடிகள்; முகம் சுளிக்கும் மக்கள்!' - தகாத செயல்களை தடுக்க கோரிக்கை

திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 2016 -ம் ஆண்டு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த ஜெயலலித... மேலும் பார்க்க