நட்சத்திரப் பலன்கள் டிசம்பர் 5 முதல் 11 வரை #VikatanPhotoCards
கர்நாடகா முதல்வர் நாற்காலிக்கு மோதல்: காங்கிரஸ் மேலிட உத்தரவு; சித்தராமையா, DKS என்ன சொல்கிறார்கள்?
கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி முற்றில் வருகிறது.
அதற்கு சாட்சி தான், நேற்று முன்தினம் (நவம்பர் 29) நடந்த 'வார்த்தை' போர்.
அதை காங்கிரஸ் மேலிடம் சற்றும் விரும்பவில்லை. இதனால், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரிடமும் காங்கிரஸ் மேலிடம் பேசியுள்ளது.
இருவரும் சமாதானமாக செல்லவும், இனி டெல்லியில் எந்தவொரு சந்திப்பும் நடைபெற்றாலும் இரு தலைவர்களும் ஒற்றுமையாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சித்தராமையா முதல் அடி
இதையடுத்து முதல் அடியை சித்தராமையா எடுத்து வைத்துள்ளார். அது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "இருவரும் சமாதானமாக செல்லுமாறும், இந்தப் பிரச்னை குறித்து இருவரும் பேசிக்கொள்ளவும் மேலிடம் கூறியுள்ளது.
இதனால், டி.கே.சிவக்குமாரை உணவருந்த அழைத்துள்ளேன். அவர் வரும்போது, இந்தப் பிரச்னை குறித்து நாங்கள் பேசுவோம்.
ஆனால், என்னுடைய கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை நான் கேட்பேன், மதிப்பேன். அவர்கள் என்னை டெல்லிக்கு அழைத்தாலும், அங்கே செல்வேன்" என்று பேசியுள்ளார்.
டி.கே.சிவக்குமார் என்ன சொல்கிறார்?
டி.கே சிவக்குமாரோ, "கட்சி உறுப்பினர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வமாக இருக்கலாம். ஆனால், எனக்கு எந்தவொரு அவசரமும் இல்லை. கட்சி தான் முடிவு எடுக்கும்" என்று கூறியுள்ளார்.














