"அம்மா, அப்பா சாரி... தவறான முடிவை எடுக்கிறேன்" - நீட் தேர்வு பயத்தால் மாணவர் வி...
களைகட்டிய சரத் பவார் பேத்தியின் திருமணம்; நடனமாடிய 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக் கான்!
தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியாசுலேயின் மகள் ரேவதிக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் தொழிலதிபர் சரங் லகானியைத் திருமணம் செய்தார்.
இதையொட்டி நேற்று இரவு சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். நடிகர் ஷாருக் கானும் இதில் கலந்து கொண்டார். கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் விருப்பமான பாடல்களுக்கு நடனமும் ஆடினார்.
குச் குச் ஹோதா ஹை படத்தில் இருந்து தனது புகழ்பெற்ற கோய் மில் கயா பாடலுக்கு ஷாருக்கான் நடனமாடுகிறார். இந்தக் காணொலியை பாடகர் ராகுல் வைத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரும் சங்கீதத்தில் பங்கேற்றார். அவர் காணொலியை வெளியிட்டு, "நேற்று இரவு கிங் கான் எங்கள் மேடையை அலங்கரித்தார். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார். மணமகன் மற்றும் மணமகளை நோக்கி அவரது இனிமையான சைகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் மணமக்களுடன் சேர்ந்து நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தினார். ஷாருக் கான் நடனமாடுவதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திரைப்படங்களில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களின் இதயங்களை எப்படி வெல்வது என்பது ஷாருக்கிற்குத் தெரியும் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
சங்கீத நிகழ்ச்சிக்கு, நடிகர் ஷாருக்கான் ஒரு அதிநவீன முழு கருப்பு தோற்றத்தில் வந்திருந்தார். நடிகர் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, சுஹானா கான், அர்ஷத் வர்சி, அபய் வர்மா, அனில் கபூர் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.



















