செய்திகள் :

காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

post image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அருகில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ``பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிமட்டத் தொண்டர்களை முதலமைச்சர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வளர அனுமதிக்கின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 திக்விஜய் சிங்
திக்விஜய் சிங்

அதற்கு அடுத்தப் பதிவுகளில், ``நான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் தீவிர எதிர்ப்பாளன்" என விளக்கமளித்த போதிலும், அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டேக் செய்து, ``காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்களும் அதிகாரப் பரவலாக்கமும் தேவை" என்றப் பதிவும் விவாதத்தை சூடுபடுத்தியது.

இதற்கிடையில், திக்விஜய் சிங், ``காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நம்பவில்லை. காந்தியின் கொலையாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு எதுவும் இல்லை. நான் காங்கிரஸில் இருந்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடியுள்ளேன். நான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க சித்தாந்தத்தை எதிர்க்கிறேன். நான் அவர்களின் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானவன்" எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, காங்கிரஸின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவின் உறுப்பினரான பவன் கேரா, ``கோட்சேயின் ஆதரவாளர்கள் காந்தியின் ஆதரவாளர்களாக இருக்க முடியாது" என்றார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,``ஆர்.எஸ்.எஸ் என்பது வெறுப்பால் ஆன ஒரு அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் வெறுப்பைப் பரப்புகிறது. அல்-கொய்தாவும் வெறுப்பால் ஆன ஒரு அமைப்புதான். அல்-கொய்தாவும் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை. அல்-கொய்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை" என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டணியைப் போல காங்கிரஸ் ஒருபோதும் மத அரசியல் செய்வதில்லை. எங்களுக்கு அதிகாரம் குறைவாக இருக்கலாம், ஆனால் எங்கள் முதுகெலும்பு பலவீனமானதல்ல. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மதத்தின் பெயரால் வாக்குகள் கேட்பதில்லை. நாங்கள் மதத்தை நம்புகிறோம், ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனர்.

பா.ஜ.க-விடம் அதிகாரம் இருக்கிறது, ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஒரு காலத்தில் மூவர்ணக் கொடியையும் வந்தே மாதரத்தையும் கூட ஏற்க மறுத்தவர்கள், இப்போது மக்களின் உரிமைகளை நசுக்குகிறார்கள். நாம் உறுதியாக நின்று இத்தகைய முயற்சிகளை எதிர்க்க வேண்டும்," என்றார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் பைலட்,`` காங்கிரஸ் கட்சிக்குள் எந்த சிக்கலும் இல்லை. இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சியை வழங்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது. நாட்டிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை. காங்கிரஸுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொன்னார்கள். கார்கே மற்றும் ராகுலை வலுப்படுத்துவதே எங்கள் ஒரே குறிக்கோள்," எனக் கூறினார்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

மற்றொரு மூத்த தலைவரான சுப்ரியா ஸ்ரீநேட், ```ஆர்.எஸ்.எஸ்-ஸிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள்தான் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியைக் கொன்ற நாதூராம் கோட்சேயின் அமைப்பிடமிருந்து நாங்கள் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை" என்றார்.

அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ்இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து... மேலும் பார்க்க

"100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா?" - கனிமொழி கேள்வி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கனிமொழிதலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் ... மேலும் பார்க்க

'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' - ஆர்.கே.செல்வமணி உருக்கம்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.செல... மேலும் பார்க்க

விஜயகாந்த்: 2-ம் ஆண்டு நினைவுநாள்; தலைவர்களின் நினைவுக் குறிப்புகள்!

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தே.மு.தி.க-வினர் குருபூஜையாக இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். தேமுதிக தொண்டர்கள் இருமுடி சுமந்து... மேலும் பார்க்க

Vijay: 'ஜனநாயகன் NDA வுக்கு வர வேண்டும்!' - விஜய்க்கு தமிழிசை அழைப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டிருக்கிறார்.தமிழிசைஅதன் பிறகு செய்தியாளர்களைச... மேலும் பார்க்க