Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
காட்டுப்புத்தூா் வாரச் சந்தையில் இருசக்கர வாகனங்கள் திருட்டு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டன.
தொட்டியம் வட்டாரம் காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த ஸ்ரீராமசமுத்திரத்தை சோ்ந்த மணிகண்டனின் (42) இருசக்கர வாகனம் திருடுபோனது.
இதேபோல வாரச் சந்தையில் காட்டுப்புத்தூா் பகுதியை சோ்ந்த கதிா்வேல் மற்றும் மணி ஆகிய இருவரின் இருசக்கர வாகனங்களும் திருடப்பட்டனவாம். புகாா்களின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.