செய்திகள் :

காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதல்; மேட்டுப்பாளையம் ’பாகுபலி’ யானை காயம்!

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான  உடல், நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த யானை நாள்தோறும் மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையை கடந்து விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வருவதால், பயிர் சேதம் ஏற்பட்டாலும், மனிதர்கள் யாரையும் தாக்கியதில்லை. பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இந்த யானை மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து செல்வதை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுவது வழக்கம்.

பாகுபலி யானைக்கு சிகிச்சை
பாகுபலி யானைக்கு சிகிச்சை

இந்த நிலையில் வனப்பகுதிக்குள் மற்றொரு காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் இடது பின்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வனக் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன் காயத்திற்கு மருந்துகள் நேரடியாக செலுத்த இயலாததால், மருந்துகள் கலந்த களியை உருண்டைகளாகச் செய்து யானைக்கு வைத்து வருகின்றனர். அந்த களி உருண்டைகளை யானை உட்கொண்டு வருகிறது.

பாகுபலி யானைக்கு சிகிச்சை
பாகுபலி யானைக்கு சிகிச்சை

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாகுபலி யானைக்கும் மற்றொரு காட்டு யானைக்கும் வனப்பகுதிக்குள்  ஏற்பட்ட மோதலில் தந்தம் குத்தியதால் பாகுபலி யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் அளவு சிறியதாக இருந்தாலும் வனப்பணியாளர்கள் மற்றும் வனக் கால்நடை மருத்துவர்கள் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

Man Eater: சிறுத்தையே சிக்கினாலும்... 20 நாளாகப் போக்கு காட்டும் கூடலூர் ஆட்கொல்லிப் புலி | Photos

ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்ல... மேலும் பார்க்க

நள்ளிரவில் தகரக் கொட்டகையை நொறுக்கிய காட்டு யானை; தப்பியோடி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி குட... மேலும் பார்க்க

Orangutans: ஒடிசாவில் கைவிடப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்; கடத்தல் கும்பல்களின் கொடூரப் பின்னணி

இரக்கமற்ற கடத்தல் சம்பவங்களில் ஒடிசாவைச் சேர்ந்த வனவிலங்கு கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. யானை தந்தங்கள், எறும்பு தின்னிகளின் செதில்கள் புலி, சிறுத்தை தோல்கள், அரிய வகை ஆமைகள் மற்றும் ஒடிசாவின... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?

கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.இந்த வெள்ளம் மனிதர்களின் உயிர்களை மட்டுமே குறி வைக்கவில்லை. வாக... மேலும் பார்க்க

Man Eater: 130 கண்காணிப்பு கேமிராக்கள், 13 கூண்டுகள்; 11-வது நாளாகப் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி

மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் 2 நபர்களை புலி தாக்கி கொன்றதுடன் அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதர்களை வேட்டையாடி பழகிய அந்தப் புலிய... மேலும் பார்க்க

"அவ்வளவு பெரிய பனியும் பாறைகளும் கீழே விழுந்ததால்தான் அந்த அதிர்வுகள்.!" - நேபாள வெள்ளம் விளக்கம்

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26), நேபாளத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது வரை வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த வெள்ளத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக் குழு தேடி வ... மேலும் பார்க்க