செய்திகள் :

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மாலை வேளையில், மேல் தளத்துக்கான கான்கிரீட் போடும் பணியில் சுமார் 12-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சாரம் சரிந்ததில் சென்டரிங் கட்டுமானம் மொத்த குவியலாக விழுந்ததில் தொழிலாளிகள் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் அலறினர். சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் அங்கு கூடி அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் திருவலம் காவல் நிலைய போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்து

இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் விரைவாக மீட்கப்பட்ட நிலையில், வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் 4 பேரும், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, 2 தொழிலாளிகள் பலியானதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்திருக்கிறது.

இடிபாடுகளில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளதாகவும், அவரின் நிலை என்ன ஆனது? என்பதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அரக்கோணத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சம்பவ பகுதியே பரபரப்பாகக் காணப்படுகிறது.

மதுரை: லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் - ஜல்லிக்கட்டு நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்

சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த மாடுபிடி வீரர்கள்.ப... மேலும் பார்க்க

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் - மீட்புப் பணி தீவிரம்

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்ப... மேலும் பார்க்க

"பார்க்கவே முடியாத கோரமான காட்சி" - திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​ ... மேலும் பார்க்க

நேபாளம்: சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு - நெஞ்சை உலுக்கும் சோகம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க

Nepal: ஒரே கட்டடத்துக்குள் 24 சடலங்கள்; சேற்றுக்குள் உறைந்த உடல்கள் - போராடி மீட்ட மீட்புக்குழு

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க

கோவை: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து - தீக்கிரையான 50 வீடுகள்!

கோவை நவஇந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்காக அப்பகுதியில் தகரத்திலான தற்காலிக குடியிருப்புகள்... மேலும் பார்க்க