செய்திகள் :

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், நேற்று மாலை கான்கிரீட் மேல்தளம் அமைக்கும் பணியில் 13-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிக பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் சரிந்தது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கியபோது, முக்கால் பாகம் போடப்பட்ட கான்கிரீட் கலவையும், ராட்சத இரும்பு கம்பிகளின் சாரமும் அவர்கள்மீது விழுந்தது.

தகவலறிந்ததும், தமிழக போலீஸாரும், தீயணைப்புத்துறை வீரர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அருகிலுள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குடிபாலா போலீஸாரும் விரைவாக வந்து உதவினார்கள். இரவு நேரம் ஆனதாலும், இடிபாடுகளை அகற்றி தொழிலாளிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதாலும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

தேவாலய விபத்து

இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், துரதிஷ்டவசமாக 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா? என்பதை கண்டறிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, முழுமையான மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதை உறுதி செய்த பிறகே மீட்புப் படையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக, கவனக்குறைவாக செயல்பட்ட கட்டட ஒப்பந்ததாரர் டேவிட் மோகன் (வயது 43) என்பவர் மீது திருவலம் போலீஸார் பி.என்.எஸ் 106(1) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க

வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி - ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பிரவசத்தில் தாய், சேய் இறப்பு; விறகு வியாபாரிமீது பாய்ந்த வழக்கு! - பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரின் மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில், மூன்றாவதாக தேன்மொழி கர்ப்பமட... மேலும் பார்க்க