செய்திகள் :

காதல் தோல்வி கட்டாயம்; 'Chief Dating Officer' பதவி ஆள்தேடிய நிறுவனம் - முக்கிய கண்டிஷன் இவைதான்!

post image
பெங்களூருவைத் தளமாகக் கொண்ட டாப்மேட் என்ற நிறுவனத்திற்கு தலைமை டேட்டிங் அதிகாரி வேண்டுமென்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பல்வேறு ஸ்டார்ட்டர் நிறுவனங்கள் வந்துவிட்டன. பல வினோதமான யோசனைகளுடன் இந்த நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். அந்த வகையில் பெங்களூருவில் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு புதிய நிறுவனத்தின் சமீபத்திய பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் டாப்மேட் நிறுவனத்திற்கு ஒரு தலைமை டேட்டிங் அதிகாரி (chief dating officer) தேவை எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இதற்கு சில தகுதிகளையும் முன்வைக்கின்றனர்.

குறைந்தது 1 பிரேக்அப் கட்டாயம், 2 சிச்சுவேஷன்ஸிப் மற்றும் 3 டேட்டிங்களை அனுபவித்திருக்க வேண்டும் (அதனை நிரூபிக்கத் தேவையில்லை, ஆனால் கதை சொல்லவேண்டும்)

புதிய டேட்டிங் விதிமுறைகள் அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் கூறியுள்ளனர்.

இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைதள யூசர்கள் பலரும் தங்களது வினோதமான கருத்துகளை தெரிவித்த வண்ணமாக இருக்கின்றனர்.

Adani: 'ரூ.10 லட்சம் முதல் ரூ.10,000 கோடி வரை' - மகனின் திருமணத்தில் எடுத்த திடீர் முடிவு

ப்ரீ-வெட்டிங், கிராண்ட் வெட்டிங் என சென்ற ஆண்டு அம்பானி மகனின் திருமணத்தை உலகமே பேசித் தள்ள, இந்த ஆண்டு இந்தியாவின் இன்னொரு டாப் பணக்காரரான அதானியின் மகன் திருமணம் நேற்று முன்தினம் சத்தமே இல்லாமல் நடந... மேலும் பார்க்க

கடைசி நேரத்தில் எழுந்த கேள்வி; மணமகள் மாமாவால் வெளிவந்த உண்மை; திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்

மகாராஷ்டிராவில் சிபில் கணக்கு சரியில்லாத காரணத்தால் திருமணத்தையே மணப்பெண்ணின் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகில் உள்ள முர்திஜாபூர் என்ற இடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக... மேலும் பார்க்க

AI, பத்திரிகையாளர்களின் செய்தி ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது - DW இயக்குநர் ஜெனரல் பீட்டர் லிம்பர்க்

ஜெர்மன் அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான Deutsche Welle-இன் இயக்குநர் ஜெனரல், திரு. பீட்டர் லிம்பர்க், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: மத்திய பட்ஜெட் டு டெல்லி தேர்தல் முடிவுகள்..! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், டெல்லி தேர்தல் முடிவுகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடிகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்வ... மேலும் பார்க்க

Delhi Elections: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு `ஷாக்' கொடுத்த டெல்லி சட்டமன்றத் தேர்தல்!

டெல்லியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவான சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இத்தேர்தல் முடிவுகள் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந... மேலும் பார்க்க