செய்திகள் :

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

post image

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

இந்த சூழலில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார்.

வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்
வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்

இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.

அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தற்போது இந்தப் பட்டியலில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் எம். பி ஆர்.தர்மரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

எம்பி தர்மர் இன்று (ஜன.24) மாலை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறாரா? ஓபிஎஸ் என்ற பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தேமுதிக: "எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம்" - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அ... மேலும் பார்க்க

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

முதல் களம் - 02காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்திமுதல் களம் - 2 | கருணாநிதிதான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதி... மேலும் பார்க்க

'அதட்டல் வேலுமணி; தங்கமணிக்கு தனி கவனிப்பு; சங்கடத்தில் அதிமுகவினர்?' - NDA கூட்டம் ஹைலைட்ஸ்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் NDA வின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அணிவகுத்த இந்... மேலும் பார்க்க

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல்அரசியல் ஆடுபுலி 02நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது.திரைத்துறையி... மேலும் பார்க்க