செய்திகள் :

கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான்

post image

ஈரான் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கியமான தளம், 'கார்க் தீவு'.

இந்தத் தீவை குறி வைத்து தாக்கியுள்ளது அமெரிக்கா.

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் கூறுகையில், "எனது வழிகாட்டுதலில் கார்க் தீவில் உள்ள ராணுவ தளவாடங்கள் தாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கோ, பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் வந்தால், எதுவும் யோசிக்க‌மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின்‌ எரிசக்தி தளவாடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தது ஈரான்.

இப்போது அமெரிக்கா கார்க் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்றாலும், கார்க் தீவு மீதான தாக்குதலை ஈரான் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது.

ஈரான் பதிலடி

இன்று காலை (இந்திய நேரப்படி) ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.

இனி ஏதேனும் ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவிற்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

மேலும், சவுதி அரேபியாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய 5 அமெரிக்க விமானங்களை ஈரான் தாக்கியுள்ளது என்று 'The Wall Street' பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தத் தாக்குதல், மிரட்டல் அனைத்துமே கார்க் தீவிற்காக அமெரிக்காவைப் பழி வாங்கும் நடவடிக்கையே.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல... மேலும் பார்க்க

விஜய்யை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சியா? - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் ந... மேலும் பார்க்க

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார்.இந்த நிலையில், ஜப... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது!" - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச... மேலும் பார்க்க

`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' - ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்ட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.!" - பெ.சண்முகம்

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போ... மேலும் பார்க்க