“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ... பனையூரில் முகாமிடும் விஜய்” - பின்னணி என்ன?
`கிரிக்கெட்டின் லாஸ்ட் ஓவரில் சிக்ஸர் போல இந்த மாநாடுகள்' - திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை
சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து மாநாடு, நிர்வாகிகள் சந்திப்பு என தமிழ்நாட்டை வலம்வரத் தொடங்கிவிட்டனர். அதன் அடிப்படையில், தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு திருச்சி மாவட்டம், சிறுகனூரில் இன்று கலாசார நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ``ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெற்றி பெறட்டும்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார். துணை முதல்வரும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார்.
கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு, மூத்த தலைவர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கின்றனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மாநாடுகள் நடத்திவருகின்றனர். 10 லட்சம் பேர் கலந்து கொண்டிருக்கும் இந்த மாநாட்டில் என் வயது குறைந்திருப்பதாக உணர்கிறேன். உங்களால்தான் வளர்ந்து, உயர்ந்தேன். உங்களுக்காகத்தான் வாழ்கிறேன். கலைஞர் முதல் நான் வரை இந்தப் பாச உணர்வைப் பார்க்கிறேன். கிரிக்கெட்டில் ஆரம்பத்திலிருந்து ரன் எடுப்பது சரிதான். ஆனால், மேட்ச்சின் இறுதியில சிக்ஸ் அடுத்து கிராண்ட் வெற்றியாக மாற்றுவதுதான் இந்த மாநாடுகளின் நோக்கம்." என்றார்.
Speech Updates are on the way...














