செய்திகள் :

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

post image

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உள்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இன்று பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தினர். குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

இதைத் தொடர்ந்து அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவிக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சைக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி, விடுமுறை விடப்படுவதாகவும் விடுமுற... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மே... மேலும் பார்க்க

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை: ஆர்எஸ் பாரதி

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை என்று திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேடடியி... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதி

வேலூரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில், வசித்து... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்க... மேலும் பார்க்க