செய்திகள் :

கிரெடிட் கார்டும் 'மகிழ்ச்சி'தான்; என்ன கார்டு தேர்வு செய்யணும்? #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

post image

நாள் 4

இதுவரை கிரெடிட் கார்டு என்றால் 'கடன்... கடன்... கொஞ்சம் கவனம் வேண்டும்... பார்த்து செலவு செய்ய வேண்டும்' என்று பார்த்தோம்.

இன்று கிரெடிட் கார்டின் பாசிட்டிவ் பக்கங்களைப் பார்க்கலாம். அவற்றை பற்றி நமக்கு விளக்குகிறார் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.

"கிரெடிட் தொடங்கி எதுவாக இருந்தாலும், அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நல்லதும், கெட்டதும் அமையும்.

முன்னாள் வங்கியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்
முன்னாள் வங்கியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்

கிரெடிட் கார்டுகள் மூலம் ஒரு பொருளை வாங்க முடியும்... ஷாப்பிங் செய்ய முடியும் என்பதெல்லாம் உண்மை. அதே அளவிற்கு உண்மை... கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங்குகளில் சலுகைகள், தள்ளுபடிகள் பெறலாம் என்பதும்.

சில பொருள்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் சில தள்ளுபடிகள், சலுகைகள் கிடைக்கும். அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம்.

ஆனால், ஒரு பொருளை வாங்க வேண்டும்... அதற்கு சலுகை கிடைக்க வேண்டும் என்பதற்காக கிரெடிட் கார்டுகள் வாங்குவது தவறு.

ஷாப்பிங்கில் மட்டும் சலுகை இல்லை. சில நேரங்களில், ஏர்போர்ட் லவுன்ச்களில் கூட சலுகை கிடைக்கும்.

எந்தெந்த கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவை?

பொதுவாக Lifetime Free கிரெடிட் கார்டுகள் மற்றும் Secured கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவை.

சரியாக பில் கட்டி வந்தாலே, அனைத்து கிரெடிட் கார்டும் பாதுகாப்பானவைத்தான் மக்களே.

நாளைச் சந்திப்போம்...

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க

கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் - 4

என்ன தான் பார்த்து பார்த்து நிதி திட்டமிடல் செய்தாலும், சில நேரங்களில் சில தவறுகளும் நடந்துவிடும். அவை தெரிந்து செய்யும் தவறுகள் அல்ல... தெரியாமல் செய்யும் தவறுகள் தான். அவை என்னென்ன என்பதை பட்டியலிடு... மேலும் பார்க்க

Labham - 2: தங்கம் விலை இந்த 10 ஆண்டில் எத்தனை மடங்கு உயரும்? #அக்‌ஷய திருதியை #Akshaya Tritiya

தங்கம் என்பது நம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நமக்கு மொத்தமாக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் வாங்கிக் குவிக்கிறார்கள் நம் மக்கள். இன்னும் சில நாள்களில் அக்ஷய திருதியை ப... மேலும் பார்க்க

NRI Corner 9 - உங்கள் பெற்றோர், குழந்தைகளுக்கு மாதந்தோறும் பணம் தர இந்த ஒரு ஃபண்ட் இருந்தால் போதும்!

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை, தமிழ்நாட்டில் இருக்கும் பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும்; அல்லது, கல்லூரியில் படிக்கும் மகள்/மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும... மேலும் பார்க்க