செய்திகள் :

கிலோ கணக்கில் தங்கம்... கோடிக்கணக்கில் சொத்துகள் - DSP கைதில் அதிர்ந்துபோன அதிகாரிகள்; பின்னணி என்ன?

post image

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தெலங்கானா காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) சங்கிரெட்டி பீம் ரெட்டி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த மே மாதம் பீம் ரெட்டி தனது மனைவியுடன் சார்தாம் யாத்திரை செல்வதற்கு முன்பாக ஒரு டைரி எழுதியுள்ளார். அதில் தனக்குள்ள சொத்துக்கள், முதலீடுகள், கடன்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களைக் கைகளால் பட்டியலிட்டு, அதன் ஸ்கேன் நகல்களை வாட்ஸ்அப் மூலம் தனது மகன்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த ரகசிய டைரியைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள், அதன் அடிப்படையில், ஜூலை 2-ம் தேதி தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள பீம் ரெட்டியின் வீடு, அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான 16 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

DSP சங்கிரெட்டி பீம் ரெட்டி
DSP சங்கிரெட்டி பீம் ரெட்டி

இந்த சோதனையில் ஹைதராபாத், பெங்களூரு போன்ற முக்கிய இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டன. ஹைதராபாத், கச்சிபௌலி, தெல்லாபூர் பகுதிகளில் சொகுசு வில்லா, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காலி மனைகள், மணிகொண்டாவில் வணிக வளாகப் பங்குகள், விகாரபாத், சங்காரெட்டி மற்றும் கர்நாடகாவில் சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் இருப்பது தெரியவந்தது.

'ராகவேந்திரா ராக் சாண்ட் மினரல்ஸ்' நிறுவனத்தில் ரூ. 75 லட்சம் முதலீடு. மேலும், பீம் ரெட்டி மற்றும் அவரது பினாமி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ. 43.60 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 19.91 லட்சம் வங்கி இருப்பு ஆகியவற்றை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து நேற்று இரவு இப்ராஹிம்பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, சங்கிரெட்டி பீம் ரெட்டியை அதிரடியாகக் கைது செய்தனர். விரைவில் இவர் ஏ.சி.பி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க