செய்திகள் :

கீழே விழுந்த கைப்பை; பைக்கை நிறுத்திய கணவன்; விரட்டிக் கொன்ற காதலன்; ஆந்திராவில் கொடூரம்

post image

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி அருகில் உள்ள சூளகிரியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹாசினி (19). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

சம்பவத்தன்று ஆந்திரா மாநிலம் குடுப்பள்ளி மண்டலத்தில் உள்ள மல்லப்பா கொண்டா மலை உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு ஹாசினி, அவரது கணவர் ரமேஷ் மற்றும் மகளுடன் சென்றனர். மலையில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது நடுவழியில் எதிர்பாராத விதமாக ஹாசினியின் கைப்பை தவறி கீழே விழுந்தது. உடனே ரமேஷ் பைக்கை நிறுத்தினார்.

அந்நேரம் மலையில் மறைந்திருந்த சிலர் வந்து ரமேஷை வனப்பகுதிக்குள் விரட்டிச்சென்று கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்கானிப்பு கேமரா காட்சிகள் ஆய்வுசெய்யப்பட்டது.

இதில் ஹாசினி கொலை நடந்த பிறகு அந்த இடத்தில் இருந்து இரண்டு பேருடன் பைக்கில் புறப்பட்டு சென்றது தெரியவந்தது. அதோடு அப்பகுதியில் செயல்பாட்டில் இருந்த மொபைல் போன்கள் குறித்த விபரங்களையும் சேகரித்தபோது இக்கொலையில் ஹாசினிக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ஹாசினிக்கு சிறுவயதிலிருந்து யுகந்தர் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் அவர்களது காதல் தொடர்ந்துள்ளது.

கொலை
கொலை

இதில் ரமேஷைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக மலைக்கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறி ரமேஷை ஹாசினி சம்மதிக்க வைத்துள்ளார். தம்பதியினர் தங்கள் மகளுடன் பயணம் செய்தபோது, ​​ஹாசினி தொலைபேசியில் யுகந்தருடன் அவர்களின் நேரடி இருப்பிடத்தைத் தொடர்ந்து பகிர்ந்து வந்ததார்.

இது தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவியது. மலைப்பாதையில் உள்ள மூன்றாவது வளைவுப் பகுதியில் இந்தக் கொலைத் திட்டம் செயல்படுத்தப்படுத்த திட்டமிட்டு இருந்தனர். அங்கு ஹாசினி வேண்டுமென்றே தனது கைப்பையைக் கீழே போட்டுள்ளார். அதனால் ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது மறைந்திருந்த யுகந்தரும் அவரது கூட்டாளிகளும் வெளியே வந்து, ரமேஷை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சுமார் 100 மீட்டர் தூரம் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அவர்களது மகள் அருகில் இருக்கும்போது இக்கொலை நடந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.

ஹாசினியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார். ஆனால் இத... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க