செய்திகள் :

'குஜிலியம்பாளையம் தாசில்தார் சொந்த வெறுப்பில் செய்துள்ளார்' - அமைச்சர் நிர்மல்குமார்

post image

மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "வருகிற 17-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் அதிகாரிகளுடன் தற்போது நடைபெற்றது. 

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது 8000 நபர்கள் வரை கோயில் மேல் பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகம் நடத்துவதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் முழு தகவல்கள் வெளியிடப்படும்" என்றார்.

மாணவர்கள் போராடுவதற்கு தடை விதித்த, இடதுசாரி இயக்கத்தினரை கணக்கெடுப்பது உள்ளிட்ட சுற்றிக்கைகள் குறித்த கேள்விக்கு, ``குஜிலியம்பாறை தாசில்தார் சொந்த வெறுப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் 6 மாதத்தில் ஓய்வு பெறவுள்ளார். ஆட்சியருக்கே தெரியாமல் அதை செய்துள்ளார். தகவல் தெரிந்ததும் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குஜிலியாம்பாளையம் தாசில்தார் அய்யாசாமி

அரசாங்கத்திற்கு இப்படி எந்த எண்ணமும் கிடையாது. ஒருசிலர் தான் இதை தவறாக அணுகியுள்ளனர்.

அரசு கல்லூரி மாணவர்கள் போராடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இந்த விவகாரத்தில் அரசுக்கு உடன்பாடு இல்லை.

கல்லூரிகள் அனைத்தும் கவர்னரின் மேற்பார்வையில் நடக்கிறது. கல்லூரிகளை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென பல ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கிறோம்.

பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கவர்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருக்கின்றன. இதில் பல சிக்கல்கள் உள்ளன.

ஜனவரி மாதம் வரும்போது எந்த பல்கலையிலும் துணை வேந்தர்கள் இருக்க மாட்டார்கள். நிர்வாக ரீதியாகவும் நிறைய சிக்கல்கள் உள்ளன. இவற்றை சீரமைக்க முயற்சித்து வருகிறோம்.

CTR Normal Kumar - TVK
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்

காலி பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடக்கவில்லை, சான்றிதழ்கள் கொடுக்க முடியவில்லை. கல்லூரிகளை மாநில அதிகாரத்துக்கு கொண்டு வந்தால் தான் நம்முடைய முழு கட்டுப்பாட்டில் செயல்படுத்த முடியும்" என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க