செய்திகள் :

குறைவான AMH இருந்தால் இயற்கையாகக் குழந்தை பெற முடியாதா? - பெண்களுக்கான தெளிவுரை!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"டாக்டர், எனக்கு AMH குறைவாக இருக்கிறது என்று சொன்னார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. எங்களுக்குக் குழந்தை பிறக்காதா?" — சமீபத்தில் 33 வயது பெண் ஒருவர், மிகுந்த மனக்குழப்பத்துடன் என்னிடம் ஆலோசனைக்கு வந்திருந்தார்.

தனது AMH பரிசோதனை அறிக்கையைப் பெற்றவுடன், இணையத்தில் தேடிப் படித்துவிட்டு, எது சரி எது தவறு என்று புரியாமல் முற்றிலும் நிலைகுலைந்து போயிருந்தார் அவர். பரிசோதனை அறிக்கையில் இருந்த அந்த ஒரு சிறிய எண், அவரது மனதில் பல கேள்விகளையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் விதைத்திருந்தது.

உண்மைதான், இன்றைய காலகட்டத்தில் AMH குறைவாக இருப்பதாகத் தெரிந்தவுடன் பல பெண்களுக்கும் இதே போன்ற பயம் ஏற்படுகிறது. "நான் தாமதமாகிவிட்டேனா?", "எனக்கு சிகிச்சை மட்டும்தான் வழியா?" எனப் பலவாறு சிந்திக்கத் தொடங்குகின்றனர். ஆனால், பரிசோதனை அறிக்கையில் இருக்கும் ஒரு எண்ணை மட்டும் பார்த்து நாம் எந்தவொரு இறுதி முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. முதலில் அந்த ஹார்மோனின் உண்மையான செயல்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

AMH என்பது என்ன?

Anti-Müllerian Hormone (AMH) என்பது ஒரு பெண்ணின் சினைப்பையில் (Ovary) வளர்ந்து வரும் கருமுட்டைகளிலிருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். எளிமையாகச் சொன்னால், சினைப்பையில் தற்சமயம் உள்ள கருமுட்டைகளின் இருப்பு (Egg Reserve) எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய உதவும் ஒரு வழிகாட்டி இது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், AMH என்பது ஒரு தகவல் மட்டுமே; அது ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த கருத்தரிப்புத் திறனைத் தீர்மானிக்கும் இறுதிக் காரணி அல்ல.

குறைந்த அளவு எதைக் குறிக்கிறது?

பொதுவாக, AMH அளவு குறைவாக இருப்பது கருமுட்டைகளின் இருப்பு குறைந்து வருவதைக் காட்டலாம். ஆனால், அதற்காக இயற்கையாக கர்ப்பம் தரிக்கவே முடியாது என்று அர்த்தமல்ல. கருத்தரிப்பு என்பது ஒரு தனிப்பட்ட எண்ணைச் சார்ந்த விஷயம் அல்ல. ஒரு பெண்ணின் வயது, கருமுட்டையின் தரம் (Egg Quality), மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சமநிலை, கருப்பை மற்றும் கருக்குழாய்களின் ஆரோக்கியம், துணையின் விந்தணுக்களின் தரம் மற்றும் தம்பதியரின் வாழ்க்கை முறை எனப் பல காரணிகள் இதில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. அதனால்தான், AMH அளவு குறைவாக இருந்தாலும் பல பெண்கள் இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் பிரசவிக்கிறார்கள்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்:


தற்காலத்தில் பல பெண்கள் செய்யும் முக்கியத் தவறு, அறிக்கை கிடைத்தவுடன் இணையத் தகவல்களை மட்டும் நம்பித் தங்களைத் தாங்களே மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதுதான். இந்த பயத்தின் காரணமாகவே முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறவும் அவர்கள் தயங்குகிறார்கள். ஒரு பரிசோதனை அறிக்கையை விட, ஒரு நபரின் ஒட்டுமொத்த உடல்நிலையும் மருத்துவப் பின்னணியும்தான் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

எப்போது விழிப்புணர்வு தேவை?

திருமணமாகி ஒரு வருடத்திற்கும் மேலாகியும் கர்ப்பம் தரிக்காமல் இருப்பது, 35 வயதிற்கு மேல் இருப்பது, ஒழுங்கற்ற மாதவிடாய், PCOS அல்லது Endometriosis போன்ற பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில், குறைந்த AMH அறிக்கை வந்தால் உடனடியாகத் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பதற்றமடைவதைத் தவிர்த்து, முறையான உணவுமுறை, போதிய தூக்கம், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வது இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

என்னிடம் வந்த அந்த 33 வயது பெண்ணுக்கும் இதுவே விரிவாக விளக்கப்பட்டது. வயது, கருமுட்டையின் தரம் உள்ளிட்ட பிற காரணிகளை முழுமையாக ஆராய்ந்த பிறகே தகுந்த வழிகாட்டுதலை வழங்க முடியும் என்று கூறியதும், அவர் வந்திருந்தபோது இருந்த பதற்றம் குறைந்து, அவரது உடல்நிலையைப் பற்றிய தெளிவு ஏற்பட்டது. பரிசோதனை அறிக்கையில் உள்ள ஒரு எண் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடாது. சரியான நேரத்தில் பெறப்படும் மருத்துவ ஆலோசனையே உங்களின் தாய்மைப் பயணத்திற்கு நல்வழி காட்டும்!

- டாக்டர் ந. நதியா, B.A.M.S., PGDAGO., D.A.N.D., P.P.Y.G.

(ஆயுர்வேத கருவுறுதல் மற்றும் பெண்கள் ஹார்மோன் நல நிபுணர், விஷ்ருதா ஆயுர்வேதா, கோயம்புத்தூர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

ஏழைகளின் சுயமரியாதையும்... மண் சுமந்த மனிதர்களின் கனவுகளும்! - கரிசல் மண்ணோடு கலந்த பூமணி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவையின் முதல் தமிழகப் பெண்! - காந்திகிராமம் தந்த மாபெரும் ஆளுமையின் தியாக வரலாறு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`பிணம் நழுவி ஹிட்லர் கையில் விழுந்தது' | உளவன் 08

பிணம் நழுவி ஹிட்லர் கையில் விழுந்ததுஉளவன் 08 ஸ்பெயினின் தென்மேற்கு கடல் அமைதியாக கிடந்தது. வெல்பா (Huelva) கடற்கரை நகரின் வெப்பத்தை தனித்தது குளிர்ந்த காற்று. 1943-ம் ஆண்டு. ஏப்ரல் 30-ம் தேதி காலை நேர... மேலும் பார்க்க

``உலக அழகிகளை உருவாக்கியுள்ள இந்தியா, ஏன் உலகக் கவிகளை உருவாக்கவில்லை?" - வைரமுத்து கேள்வி

டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் கரண்சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீடம் விருதை வழங்கி கவுரவித்தார். ஞானபீடம் விருது பெறும் 60-வது இலக்கியவாதியான வைரமுத்து, விழாமேடையில் பேசியபோது, ``சாகித்ய அகா... மேலும் பார்க்க

`லில்லி எனும் புதையலில் கிடைத்த கில்லி' | உளவன் 06

உளவன் - பாகம் 06`லில்லி எனும் புதையலில் கிடைத்த கில்லி'“ஏஜெண்ட் பெயர் என்ன?”ஜெர்மனியிலிருந்து உடுருவும் அப்வேர் உளவாளியை கொத்தித் தூக்கக் காத்திருந்தனர். MI5-க்கு கிடைக்கும் இன்னொரு துருப்புச் சீட்டு.... மேலும் பார்க்க

`கரிசல் இலக்கியத்தின் முகவரிகளில் ஒருவர்' - சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார். கரிசல... மேலும் பார்க்க