செய்திகள் :

'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! - முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?

post image

டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் மும்பைதான் சொந்த ஊர். வான்கடேவில்தான் கிரிக்கெட்டே பயின்றிருக்கிறார்கள். அதனால்தானா என்னவோ இந்திய அணியை அத்தனை எளிதாக வெல்ல விடவில்லை. இயன்றளவுக்கு சவால் அளித்தார்கள்.

Ind Vs USA
Ind vs USA

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரின் அட்டகாசமான இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது.

டாஸை அமெரிக்க கேப்டன் மோனாங் படேல்தான் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பிட்ச் கொஞ்சம் மெதுவானதாக தெரிந்ததாலும், போகப் போக காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் என்பதாலும் இந்த முடிவை எடுத்திருந்தார். இது மிகச்சரியான திட்டமாகவே இருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 15 ஓவர்களுக்கு திணறவே செய்தது. 'இது 180 ரன்களை எடுப்பதற்கான பிட்ச் இல்லை. இது 140 ரன்களுக்கான பிட்ச். அதை உணர்ந்துதான் கடைசி வரை நின்று ஆடினேன்' என்றார். சூர்யாவின் இந்த புரிதல் இந்திய அணியின் பல பேட்டர்களுக்கும் இல்லை.

Ishan Kishan
Ishan Kishan

இரண்டாவது ஓவரிலயே அபிஷேக் சர்மா அலிகானின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆனார். கிட்டத்தட்ட பவர்ப்ளே முடியும் வரை இந்திய அணி இந்த பிட்ச் குறித்து சரியாக புரிந்துகொண்டதை போல தெரியவில்லை. எல்லா பேட்டர்களிடமும் ஒருவித வேகமும் அவசரமும் தெரிந்தது.

குறிப்பாக, 6 வது ஓவரில் சாக்விக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷான் கிஷான், திலக் வர்மா, சிவம் துபே என எல்லாமே முக்கியமான விக்கெட்டுகள். நல்ல லைன் & லெந்தில் வேகத்தை முழுமையாக குறைத்தும் க்ராஸ் சீமாகவும் சாக்விக் வீசிய பந்துகளை இவர்களால் சரியாக கனெக்ட்டே செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். இந்த ஒரு ஓவர் அடுத்த 45 நிமிடங்களுக்கு போட்டி அமெரிக்காவின் கையில் இருக்க காரணமாக அமைந்தது

6 வது ஓவரில்தான் சூர்யகுமார் உள்ளே வந்தார். பவர்ப்ளே முடிகையில் இந்திய அணியின் ஸ்கோர் 46-4. ரிங்கு சிங் நம்பர் 6 இல் வந்தார். ஹர்மீத் சிங், மோசின் என ஸ்பின்னர்கள் கைக்கு பந்து சென்றது. பிட்ச் மெதுவாக இருந்ததால் இருவராலுமே பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. சூர்யாவால் அவரின் வழக்கமான 360* ஷாட்களையும் ஆட முடியவில்லை. ஒரு கட்டத்தில் 22 பந்துகளில் 21 ரன்கள் எனும் நிலையில் சூர்யா இருந்தார். ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஸ்பின்னர்கள் மோசின் மற்றும் ஹர்மித்தின் ஸ்பின்னில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆகினர். ஒரு கட்டத்தில் இந்திய 77-6 என்ற நிலையில் இருந்தது.

SKY
SKY

.

'டி20 உலகக்கோப்பையின் மிகக் குறைந்த ஸ்கோரை இந்திய அணி கடந்துவிட்டது' என்று ஹர்ஷாவும், 'இந்தியாவின் டெயில் எண்டர்களிடம் கிரிக்கெட் பேட் இருக்கிறதா என்றே தெரியவில்லை. வருண் சக்கரவர்த்தியெல்லாம் 33 போட்டிகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்' என்று கவாஸ்கரும் கமெண்ட்ரியில் கிலி ஏற்றிக் கொண்டிருந்தனர். மேட்ச் அப்செட்டை நோக்கி செல்லும் தோற்றம் உண்டானது.

ஆனால், அதுவரை கட்டுக்கோப்பாக செய்த அத்தனையையும் கடைசி 5 ஓவர்களில் அமெரிக்க அணி கோட்டைவிட்டது. நீண்ட நேரம் க்ரீஸில் இருந்தது சூர்யாவுக்கு தெம்பை கொடுத்திருந்தது. நிதானமாக பந்தை கடைசி வரை பார்த்து டைம் செய்தார். சிக்சர்கள் பறக்க தொடங்கின. நேத்ராவால்கரை குறிவைத்து அடித்தார். அவர் வீசிய 16 மற்றும் 20 வது ஓவர்களில் தலா 21 ரன்களை அடித்தார். சூர்யாவின் ருத்ரதாண்டவம் 140 யை கடக்கவே சிரமப்படும் என நினைத்த இந்திய அணியை 160+ க்கு எடுத்துச் சென்றது. சூர்யா 49 பந்துகளில் 84 ரன்களை எடுத்திருந்தார்.

India
India

அமெரிக்காவுக்கு 162 ரன்கள் டார்கெட். நிதானமாக ஆடினால் எட்டக்கூடிய டார்கெட்தான் என்பதால் இந்திய அணியின் மீதே பிரஷர் இருந்தது.

ஆனால், பவர்ப்ளேயிலேயே இந்திய அணி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. சிராஜூம் அர்ஷ்தீப் சிங்கும் டைட்டான லைன் & லெந்தில் வீசி முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். கேப்டன் மோனாங் படேல், கோஸ், முக்காமலா என முக்கிய பேட்டர்கள் காலி. இதன்பிறகு கூட்டணி சேர்ந்த மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி இருவரும்தான் இந்திய அணிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தனர். பார்ட்னர்ஷிப்தான் முக்கியம் என்று முடிவு செய்து நின்று ஆடினர்.

வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் விரித்த வலைகளில் சிக்காமல் திறம்பட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். இருவரும் இணைந்து 58 ரன்களை சேர்த்தனர். இந்த கூட்டணி இன்னும் சில ஓவர்களுக்கு நின்றிருந்தால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக போயிருக்கும். 12வது ஓவரில் வருணின் பந்தில் மிலிந்த் மிக அஜாக்கிரதையாக ஸ்டம்பிங் ஆனார். இந்த ஸ்டம்பிங் அமெரிக்க அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கு வித்திட்டது. அக்சர் படேலும் 16 வது ஓவரில் கிருஷ்ணமூர்த்தியையும் ஹர்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். சுபம் என்கிற பேட்டர் மட்டும் கடைசி வரை நின்று சில சிக்சர்களை பறக்கவிட்டு தோல்வியின் தூரத்தை குறைத்துக் கொடுத்தார்.

Axar
Axar

இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சூர்யா 'ஆட்டநாயகன்'. 'என்னோட சொந்த ஊரு சொந்த மைதானம். எப்படி ஆடணும்னு எனக்கு தெரியும்' என கெத்தாகவும் பேசியிருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை எந்த சிக்கலும் இல்லாமல் வெல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்திருக்கும். இந்தியாவின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட்டு போட்டியில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது அமெரிக்கா. இந்தத் தொடரில் எதிர்பாரா ட்விஸ்ட்டுகளை சிறிய அணிகள் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

WPL 2026: '2வது முறை சாம்பியன்' - RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்' சோகம்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2026-ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூல... மேலும் பார்க்க

PT Usha: பி.டி.உஷா கணவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத... மேலும் பார்க்க

தனது Instagram பக்கத்தை நீக்கினாரா Virat Kohli? அனுஷ்காவை டேக் செய்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

ஆசிய விளையாட்டு வீரர்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். இந்த நிலையில், இன்று திடீரென அவரின... மேலும் பார்க்க

"நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து.!"- கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் உருக்கம்

கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " முழு மனதுடன் நான் காதலிக்க... மேலும் பார்க்க

'இந்தியா' தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்

வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்து டி-20 உலகக் கோப்பை நடக்க... மேலும் பார்க்க

Olympics 2028: "ஒலிம்பிக்கில் விளையாடுவதுதான் என்னுடைய ஆசை; ஆனால்" - மனம் திறக்கும் ஸ்டீவ் ஸ்மித்

34-வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன.இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ... மேலும் பார்க்க