செய்திகள் :

"கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா முதல்வர்களாக நடித்துள்ளேன்; ஆனால்..." - வி.டி.சதீசனை வாழ்த்திய மம்மூட்டி

post image

கேரள ​முதலமைச்சர் வி.டி.சதீசனுக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் கொச்சி பொதுமக்கள் நேற்று பாராட்டு விழா நடத்தினர்.

கடவந்தறா ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த அந்த விழாவில் நடிகர் மம்மூட்டி எதிர்பாராத விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மம்மூட்டி பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லாத நிலையிலும், அவர் வந்திருந்தது பொதுமக்களை ஆரவாரப்படுத்தியது. மேலும் நடிகர் குஞ்ஞாக்கோ போபனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் ஜி.பிரியங்கா தலைமை வகித்தார்.

முதல்வர் வி.டி.சதீசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி பேசுகையில், "நான் படித்த கல்லூரியில்தான் வி.டி.சதீசனும் படித்துள்ளார். நான் கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சினிமாவில் நடித்துள்ளேன். நடிப்பது என்பது ஒரு குறுகிய காலத்திற்குத்தான். ஆனால் உண்மையில் முதலமைச்சராக இருப்பது என்பது ஒரு பெரிய கடினமான வேலையாகும்.

வி.டி.சதீசனின் தோள்களில் பெரிய பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது. அனைவருக்கும் தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு இது. எல்லோரையும் அரவணைத்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அமைச்சர்களைக் கட்டுப்படுத்தி, தலைமை தாங்கி, வழிநடத்திச் செயல்பட வேண்டும்" என்றார்.

கேரள முதல்வர் வி.டி.சதீசனுக்கு சால்வை அணிவித்த மம்மூட்டி
கேரள முதல்வர் வி.டி.சதீசனுக்கு சால்வை அணிவித்த மம்மூட்டி

நடிகர் குஞ்ஞாக்கோ போபன் பேசுகையில், "மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு ஆட்சியை எதிர்பார்க்கிறேன். பொதுமக்களுக்கும் நாட்டிற்கும் புத்துணர்ச்சியையும் நன்மையையும் தரும் ஆட்சியாக இது அமையட்டும்" என்றார். ​

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசுகையில், "மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், அதனை சட்டத்தின் விதிமுறைப்படி விநியோகிப்பதும் எனது அரசாங்கத்தின் குறிக்கோள். கஜானா மக்களுடையது, அது நீதியான முறையில் விநியோகிக்கப்படும்.

வளர்ச்சி என்பது பெரிய கட்டிடங்களை எழுப்புவதுதான் என்றுதான் முன்பு கருதப்பட்டது. ஆனால் அதுவல்ல வளர்ச்சி என்பது இன்று புரிந்துவிட்டது. அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதே வளர்ச்சியாகும். அதற்கான திட்டங்கள் ஜூன் 19 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெறும்.

முதம்வர் வி.டி.சதீசனுக்கு நினைவு பரிசு வழங்கிய நடிகர் மோகன்லால்
முதம்வர் வி.டி.சதீசனுக்கு நினைவு பரிசு வழங்கிய நடிகர் மோகன்லால்

கேரளாவின் மதநல்லிணக்கம் என்றும் நிலைத்திருக்க வேண்டும். அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்து அரவணைப்பதும், ஏதேனும் கஷ்டம் வரும்போது அவர்களுக்குத் துணையாக நிற்பதுமே மதநல்லிணக்கம் ஆகும்.

வகுப்புவாதத்தோடு எந்தச் சமரசமும் இல்லை. யாரும் வகுப்புவாதம் பேசக்கூடாது என்ற வலுவான நிலைப்பாடு தொடரும். இது மதச்சார்பற்ற கேரளா என்று உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும்" என்றார்.

பின்னர் வி.டி.சதீசன் தனது சொந்த தொகுதியான பறவூர் தொகுதியில் நன்றி தெரிவிக்க சென்றபோது பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் நடிகர் மோகன்லால் கலந்துகொண்டு முதல்வர் வி.டி.சதீசனை வாழ்த்தினார்.

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க