செய்திகள் :

"கேரளா துபாயிலா இருக்கிறது?"கனிமவள லாரிகளை அனுமதிக்க கோரிய திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

post image

நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்   நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.  இதுகுறித்து ஆஸ்டின் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கும், சாலை பணிகளுக்கும் மூலப்பொருட்களான பாறை பொடி, ஜல்லி போன்றவை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து விதிகளுக்குட்பட்டு கொண்டு வரப்படுகின்றன. தற்போது கடந்த ஒரு சில மாதங்களாகவே நெல்லை - குமரி மாவட்டத்துக்கு இடையே சோதனை சாவடி அமைத்துள்ளனர். அந்த வழியாக கட்டுமான பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் 2 முதல் 4 நாட்கள் வரை லாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தான் லாரிகளை சோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்யுங்கள் என்று தான் அப்போதைய அமைச்சர் கூறியிருப்பார். ஆனால் தற்போது நடைமுறையில் வரும்போது லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. அதில் எனக்கு உடன்பாடில்லை. கண்டிப்பாக அது தவறு. அதிகபாரம் ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்தும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை அல்ல. உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் லாரிகளை காலம் தாழ்த்தாமல் அனுமதிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம்" என்றார்.

கன்னியாகுமரி மாவட்டட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

பின்னர், அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழ்நாட்டில் ஒரே சட்டம்தான். கன்னியாகுமரிக்கு ஒருசட்டம், திருநெல்வேலிக்கு ஒரு சட்டம், தூத்துக்குடிக்கு ஒரு சட்டம், காஞ்சிபுரத்துக்கு ஒரு சட்டம் இல்லை. மக்கள் பாதிக்காதவகையில்தான் இருக்கவேண்டும். சும்மா தொழில் பண்ணுகிறவர்களின் தொழிலை கெடுப்பது, லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எல்லாம் செய்யக்கூடாது. இங்கு இருக்கும் அதிகாரிகள் அதை சரியாக நடைமுறைப்படுத்தணும் என்பதற்காகத்தான் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஆஸ்டினுடன் நானும் வந்து மனு அளித்துள்ளேன்.

தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின், அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

எங்கள் பகுதியில் உள்ளவர்கள் எல்லாம் என்னிடம் குறைசொன்னார்கள். நாங்கள் வரும்போது இருநூறு இருநூற்றைம்பது லாரிகள் வரிசையாக நிற்பதை பார்க்கிறோம். ஏன் இப்படி நிற்கிறீர்கள் எனக்கேட்டதற்கு, 'நான்கு நாட்களாக இப்படி காத்திருக்கிறோம். எங்கள் தொழிலே அழிந்துபோகும்போல இருக்கிறது' என அவர்கள் அழுகிறார்கள். அதனால்தான் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம்" என்றவரிடம், "தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு கடந்த ஆட்சிகாலத்தில் இருந்தே இருக்கிறது. அதைத்தடுப்பதற்காகத்தான் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக சொல்லப்படுகிறதே?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "கேரளா இந்தியாவில் இருக்கிறதா, வெளிநாட்டில் இருக்கிறதா அல்லது துபாயில் இருக்கிறதா. அதனால் எல்லா பொருட்களும் அங்கேயும் போகும், இங்கேயும் போகும்" என்றார் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால், கேரளத்தில் இருந்து இங்கு கனிமவளங்கள் வருவதில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு "அவர்கள் செய்யும் தவறை நாம் செய்யக்கூடாது" என்றவரிடம் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பற்றி கேட்டதற்கு, "சந்தோஷம். அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க