செய்திகள் :

கேரளா: பினராயி விஜயனை பாஜக கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர்; CPM-ன் பதில் என்ன தெரியுமா?

post image

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராக ராம்தாஸ் அத்வாலே உள்ளார். இவர் தலைவராக உள்ள ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது.

ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கேரள மாநிலம் கண்ணூருக்குச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "கேரளாவில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் சேர்ந்து நின்றால் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

கேரளாவின் வளர்ச்சிக்காகத் தாராளமாக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறலாம். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் பெரிய பாய்ச்சலை கேரளா அடைய முடியும்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதால் நீங்கள் பா.ஜ.க-வாக ஆகிவிடமாட்டீர்கள். பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க-வை எதிர்க்கலாம், ஆனால் வளர்ச்சியை எதிர்க்கக் கூடாது.

கொள்கை ரீதியாக பா.ஜ.க-வுக்கும், சி.பி.எம் கட்சிக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக கருத்து இருந்தாலும், வளர்ச்சி என்ற முறையில் இந்தப் பாகுபாடு தேவை இல்லை. என்.டி.ஏ-வின் கூட்டணிக் கட்சியாக இடதுசாரிகளை வரவேற்கிறோம்.

பினராயி விஜயனை கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
பினராயி விஜயனை கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

நம் நாட்டில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் 70 சதவிகிதம் மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமர் மோடி. குறைந்தபட்ச திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டின் வளர்ச்சிக்காக சி.பி.எம் தலைமையிலான கேரளத்தின் எல்.டி.எஃப் கூட்டணி என்.டி.ஏ கூட்டணியில் அங்கமாக வேண்டும்" என்றார்.

மத்திய அமைச்சரின் கூட்டணி அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், "கேரள அரசியலைப் பற்றி மத்திய அமைச்சருக்குப் போதுமான புரிதல் இல்லை. கேரள இடதுசாரி இயக்கம் ஒவ்வொரு கட்டத்திலும் போராடித்தான் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக முன்னேறி உள்ளது" என்றார்.

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க