செய்திகள் :

"கேரவானுக்குள்ளேயே இருந்தால் நடிக்க முடியாது; அப்படித்தான் அவரும்" - விஜய் மீது வினோதினி விமர்சனம்

post image

நடிகை வினோதினி வைத்தியநாதன் கடந்தாண்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் நினைவிருக்கலாம். சில மாதங்களாக அவர் தவெக மீது விமர்சனங்களையும் வைத்திருந்தார்.

வினோதினி
வினோதினி

அவர் நடித்திருக்கும் 'லவ் ஷேர் சப்ஸ்கிரைப்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பும் சிறப்புத் திரையிடலும் நேற்றைய தினம் நடந்தன. திரையிடலுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.

அதில் செய்தியாளர் ஒருவர், "தவெக மீது நீங்கள் தொடர்ந்து விமர்சனம் வைப்பதற்கான காரணம் என்ன" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வினோதினி, "அவர் ஒரு இடத்தில் இருக்கிறார். அந்த இடத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக அந்த விமர்சனம்.

விமர்சனம் என்பது ஆதங்கத்திலிருந்து வெளிப்படுவது. நான் படத்தில் நடிக்கும்போது இயக்குநர் என் மீது விமர்சனம் வைத்தால், அவர் மீது நான் கோபப்படக்கூடாது.

எதற்காக அவர் என்னை விமர்சனம் செய்கிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

வினோதினி
வினோதினி

நான் கேரவானுக்குள்ளே இருந்தால் நடிக்க முடியாது. நான் படப்பிடிப்புத் தளத்திற்கு வர வேண்டும்.

அதுபோல, அவரும் வெளியே வந்து மக்களுக்காகப் பணி செய்யட்டும். செய்தியாளர்களைச் சந்திக்கட்டும். அந்த நாள் என்னுடைய விமர்சனம் நிறுத்தப்படும்.

ஒரு துர்சம்பவம் நிகழ்ந்தபோதும், அங்கிருந்து குரல் வரவில்லை. நாம்தாம் இங்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இப்போதும் நீங்கள் என்னைத்தான் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். கேட்க வேண்டியவர்கள் மீது நீங்கள் இன்னும் கேள்வி எழுப்பவில்லை" எனப் பேசினார்.

Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகச் செய்து வருகிறார் தனுஷ். ஞாயிறுதோறும் 500 ரசிகர்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது... மேலும் பார்க்க

சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர்; இன்று இசையமைப்பாளர்'; SK - SANA 24 வருட நட்பு பற்றித் தெரியுமா?

திருச்சியில் இருக்கும் ஜே.ஜே. பொறியியல் கல்லூரி பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்தாம் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள். சிவகார்த்திகேய... மேலும் பார்க்க

"தென்னிந்தியர் என்பதால் என்னைக் கிண்டலடித்தார்கள்" - பாலிவுட் பாகுபாடு குறித்து ரெஜினா கசாண்ட்ரா

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் 'Hindustan Times' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்... மேலும் பார்க்க

மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே உறவினர் - முழு தகவல்!

இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை படங்களில் தயாரிப்பிலும் காட்டி வருகிறார். தன்னிடம் விஜய் டிவி காலங்களில் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கு உதவும் விதமாகவும் அந்த... மேலும் பார்க்க