செய்திகள் :

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? கவலை வேண்டாம்; சிலிண்டர் இல்லாமலும் சமைக்க சில ஐடியாக்கள்!

post image

போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் எரிவாயு (LPG) விநியோகத்தில் சிக்கல்கள் வரலாம் என்ற செய்திகள் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இண்டக்‌ஷன் ஸ்டவ் ஒரு சிறந்த மாற்று என்றாலும், நடைமுறைக்கு ஒத்துவரும் வேறு சில மாற்று வழிகளையும் திட்டமிட்டு வைத்துக்கொள்ளலாம்.

electric appliances
electric appliances
  • எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில், சாதம் மட்டுமன்றி, பருப்பு வேகவைக்க, குழம்பு வகைகளையும் தயாரிக்கலாம்.

  • சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்த மைக்ரோவேவ் ஓவனைப் பயன்படுத்தலாம்.

  • சுடுதண்ணீர் வைக்க, காபி/டீ போட எலக்ட்ரிக் கெட்டில் மிக வேகமாக இருக்கும்.

  • அடுக்குமாடி குடியிருப்புகளில் விறகு அடுப்பு சாத்தியமில்லை. ஆனால், பால்கனி அல்லது திறந்தவெளி இருந்தால், அவசரத் தேவைக்குச் சிறிய குமுட்டி அடுப்பு மற்றும் கரியை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

  • ரேஷனில் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என்றால் வெளியே கடைகளில் வாங்கி அவசர தேவைக்கு ஒரு சிறிய பம்ப் அடுப்பை (Pump Stove) வைத்திருக்கலாம்.

இருக்கும் கேஸைச் சிக்கனமாக எப்படிப் பயன்படுத்தலாம்?

  • சமைப்பதற்குத் தேவையான பருப்புகளை அரை மணி நேரம் முன்பு சுடுநீரில் ஊறவைத்தால், பாதி நேரத்திலேயே சீக்கிரமாக வெந்துவிடும்.

  • பாத்திரங்களில் திறந்தபடி சமைப்பதைத் தவிர்த்து, எல்லாவற்றிற்கும் பிரஷர் குக்கரைப் பயன்படுத்தலாம். ஒரே குக்கரில் சாதம், பருப்பு, காய்கறிகளைத் தனித்தனி பாத்திரங்களில் வைத்து ஒரே நேரத்தில் சமைக்கும் (Separators) முறையைப் பழகலாம்.

  • எந்த உணவாக இருந்தாலும் தட்டு போட்டு மூடிச் சமைத்தால், ஆவி வெளியேறாமல் உணவு சீக்கிரம் வேகும்.

  • கிச்சடி, தக்காளி சாதம், பொங்கல் எனக் காய்கறிகள் மற்றும் அரிசியை குக்கரில் ஒன்றாகச் சேர்த்து (One-Pot Meals) சமைக்கலாம்.

  • சமைத்த உணவை உடனே ஹாட்பாக்ஸில் மாற்றிவிடலாம். இதனால் மீண்டும் மீண்டும் சூடுபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதுபோலவே பிளாஸ்க்கில் சுடுநீர் வைத்துக்கொள்ளலாம்.

cooking gas
cooking gas

எரிவாயு தட்டுப்பாடு என்பது தற்காலிகமான நெருக்கடிதான். ஆனால், எத்தகைய சூழலாக இருந்தாலும் சிக்கனமான, ஸ்மார்ட்டான சமையல் பழக்க வழக்கங்களை நம் கையில் எடுத்தால், எந்தவிதமான தட்டுப்பாட்டையும் பதற்றமின்றி கடந்து செல்லலாம்.

`போனுக்கும் செக், நண்பர்களுக்கும் தடை! 23 ஆண்டு திருமணத்திலும் தொடரும் சந்தேகம்' - `பேசும் மனசு' 01

கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும். சில நேரங்களில் அந்த பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ்க... மேலும் பார்க்க

Virtual Hug: வாழ்க்கை சலிப்பாக இருக்கிறதா? மொத இதைப் படியுங்கள்!

என்னங்க, ஒரே எந்திரத்தனமா, "என்னடா வாழ்க்கை இது?" அப்படின்னு தோணுதா? எப்பவும் ஒரே மாதிரி வேலை, படிப்பு, வீடு, டிராஃபிக் அப்படின்னு ஓடிட்டே இருக்கும்போது இந்தச் சலிப்பு வர்றது ரொம்ப சகஜம்தான். நீங்க மட... மேலும் பார்க்க

+2 தேர்வு: பெற்றோர் பதற்றமடையாமல் இருக்க என்ன செய்யலாம்? - கூல் டிப்ஸ்!

+2 தேர்வுகள் தொடங்கிவிட்டன. ஆசிரியர்கள், ஊடகங்கள், இன்ஃபுளூயன்சர்கள், ஏ.ஐ சாட்பாட் என அனைவரும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிவருகிறார்கள். ஆனால், இந்த நேரத்தில் உண்மையிலேயே யாருக்கு அறிவுரை மற்றும் ஆறுத... மேலும் பார்க்க