செய்திகள் :

கைமாறாக வாங்கிய பணம்; ரூ.1500-ஐ திருப்பிக் கொடுக்க நண்பரைத் தேடி அலையும் 84 வயது முதியவர்!

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன். 84 வயதான இந்த முதியவர், கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். கோவையைச் சேர்ந்த இவரின் நண்பரான பால்சாமி என்பவர், கோவில்பட்டி கருவாட்டுப் பேட்டையில் கருவாட்டுக்கடை வைத்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது தேவைக்காக 3,000 ரூபாயை பால்சாமியிடம் கைமாற்றாகப் பெற்றிருந்தார் பரமசிவன். அதில் இரண்டு மாதங்களில் ரூ.1,500-ஐ திருப்பிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் பரமசிவனும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். இதனால், பரமசிவன் – பால்சாமி இடையே தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.

கோவில்பட்டி

இந்த நிலையில், தற்போது பால் சாமிக்கு தான் தரவேண்டிய 1,500 ரூபாயை எப்படியாவது அவரிடம் கொடுத்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் பரமசிவன். பால்சாமி நடத்தி வந்த கருவாட்டுக்கடையும் தற்போது இல்லை. ஆனாலும், பால்சாமி மற்றும் அவரது குடும்பம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் பால்சாமி கடை வைத்திருந்த பகுதி, அவர் தங்கி இருந்த பகுதி என எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்பதால் கவலையுடன் அவரைப் பற்றி விசாரித்து வருகிறார் பரமசிவன்.

இது குறித்து பரமசிவன் கூறுகையில், ”கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது அவசரத் தேவைக்காக ரூ.3,000 பணம் கொடுத்தார் நண்பர் பால்சாமி. ஏற்கெனவே கொடுத்த ரூ.1,500 போக மீதமுள்ள ரூ.1,500-ஐ அவரிடம் திருப்பிக் கொடுக்க அவரை தேடி அலைந்து வருகிறேன். அவரைப் பற்றிய எந்த தகவலும் எனக்கு கிடைக்க வில்லை. அவரது குடும்பம் கோவையில் இருப்பதாக என்னிடம் கூறிய நினைவு இருக்கிறது. ஆனால், கோவையில் அவர் எந்தப் பகுதியில் உள்ளார் என்ற தகவல் தெரியவில்லை.

பரமசிவன்

எனக்கும் வயது மூப்பு ஆகிவிட்டது. உடல் நிலையும் சரியில்லை. நான் இறப்பதற்குள் அவரிடமோ அவரது குடும்பத்தினரிடமோ மீதி ரூ.1,500-ஐ திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறேன். அவரைப் பற்றிய தகவல் கிடைத்துவிடாதா என கோயிலுக்குச் சென்று சாமியையும் வணங்கி வருகிறேன்.” என்றார். இன்றைய சூழலில் கடனாக வாங்கிய பணத்தையே  பலர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வரும் நிலையில், தன்னுடைய அவசர தேவைக்கு உதவிய நண்பருக்கு மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என்று 84 வயதில் முதியவர் ஒருவர் அவரைத் தேடி வருகிறார் என்பது வியப்பாகவே உள்ளது.

ராணிப்பேட்டை: ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த தாய் - உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்த நெகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரின் மனைவி கோமளேஸ்வரி (வயது 57). இவர்களின் மகன் தினேஷ் குமார் (வயது 28). டிப்ளமோ படித்திரு... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆசிரியர் பொன்.சக்திவேல்; பார்வையற்றோரின் இருள் விலக்கும் `டிஜிட்டல் ஏகலைவன்!'

சக்திவேலின் டிஜிட்டல் புரட்சி"கண் பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு புத்தகத்தை வாசித்துக் காட்ட ஆள் கிடைப்பது வரம். ஆனால், பிறர் உதவியை எதிர்பார்க்காமல் அவர்களே அந்தப் புத்தகங்களை வாசிக்கும் சூழலை உருவாக்கி... மேலும் பார்க்க

அமெரிக்கா: 176 பட்டதாரிகளின் கல்விக் கடன்களைத் திருப்பி செலுத்திய இந்திய வம்சாவளி அனில் கோச்சர்!

அமெரிக்காவில் நடைபெற்ற வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகத்தின் வில்சன் காலேஜ் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் பட்டமளிப்பு விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் கோச்சர் மற்றும் அவரது மனைவி மரிலின் மாணவர்களுக்கு... மேலும் பார்க்க

`இதோ என் சகோதரி' - கல்லறையைத் தோண்டிய தம்பி; ஒடிசாவில் 19,300 ரூபாய்க்காக எலும்புக்கூடாக வந்த சகோதரி

ஒடிசா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம், மனிதனின் வறுமையும் மாற்றவே முடியாத சில விதிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு அதிர்ச்சிகரமான சாட்சியாக அமைந்தது. க... மேலும் பார்க்க

65 வயதில் BMWR1200GSA; உலகம் சுற்றும் வாலிபனாக பல நாடுகளைச் சுற்றிச் வரும் கதிரவன்

மலேசியத் தமிழரான கதிரவன் தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கும் விதமாக 65 வயதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்... மேலும் பார்க்க