செய்திகள் :

"கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால்.!" - முதல்வர் விஜய்யின் அறிவிப்பும் MLA-க்களின் பதில்களும்!

post image

110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்புக்கு எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அந்தவகையில் சட்டமன்றத்தில் பேசிய மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், "அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் என்று சொன்னவுடன் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ்
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ்

நிறைய பேரிடம் 4, 5 கார்கள் இருக்கிறது. என்னிடமும் கார் இருக்கிறது. ஆனால் நம் முதலமைச்சர் கொடுத்த காரில் செல்லும்போது நான் பெருமையாக பணிக்கு செல்வேன்.

அவர் கொடுத்த காரில் தொகுதியைச் சுற்றி வரும்போது அதற்கு இருக்கக்கூடிய கெத்து எம்எல்ஏ என்ற கெத்து... முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சண்முகன், "தமிழகத்தை தாங்கி பிடித்திருக்கும் முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்ற பெருமையோடு, அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொடுக்கிற காரை இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகின்றனர்" என்று கூறியவுடன் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டிருக்கிறது.

எம்எல்ஏ சிந்து
எம்எல்ஏ சிந்து

தவிர "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்... அவர் யாருக்காக கொடுத்தார்.. ஒருத்தருக்காக கொடுத்தார்..ஊருக்காக கொடுத்தார்” என்று தவெக எம்எல்ஏ சிந்து எம்ஜிஆர் பாட்டு பாடி நன்றி தெரிவிக்க அதற்கு முதல்வர் விஜய் சிரித்திருக்கிறார்.

முதல்வர் விஜய் உட்பட 14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்; அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற உதவியாளருமான விஜய் ஹன்சாரியா... மேலும் பார்க்க

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!' - முதல்வரின் அறிவிப்புகள்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புகள்CM Vijayதொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.38 லிருந்து ரூ.41 ரூபாயாக கொள்முதல் விலை உயர்வு. வ... மேலும் பார்க்க

`அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்; ஆனால்.!'- அரசுக்கு பா.ரஞ்சித் கோரிக்கை

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க

TN Assembly: "அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் மற்றும் மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும்.! - முதல்வர் விஜய் | Live

"அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்" - முதல்வர் விஜய்தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வ... மேலும் பார்க்க

``சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தடை செய்யப்பட்டவையா?" - கேள்வி எழுப்பும் அன்புமணி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, VAO-க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ``திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்க... மேலும் பார்க்க