செய்திகள் :

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் நள்ளிரவில் திடீர் ஆய்வு – காரணம் என்ன?

post image

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத் கடந்த 28-ம் தேதியன்று கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் பலவிதமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக நடைபெறுகின்றன என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் சம்பத் ஆய்வு
அமைச்சர் சம்பத் ஆய்வு

தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்களின் பட்டியலை ஆய்வு மேற்கொண்ட அவர் அனைவரும் பணியில் இருக்கின்றனரா? வருகை பதிவேடு முறையாக பதிவு செய்யப்படுகின்றதா? என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளாகத்தில் இரவு நேரத்தில் செயல்படும் சிகிச்சை பிரிவுகள் குறித்தும், வெளி நோயாளிகள் பிரவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் நேரடியாக அமைச்சர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார்.

நள்ளிரவு நேரத்தில் அதிகாரிகள் யாருமின்றி, தனது கார் டிரைவருடன் கோவை அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்த அமைச்சர் சம்பத் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மருத்துவமனையில் முகாமிட்டு மருத்துவ பணிகளை ஆய்வு செய்தார்.

ஈரான் போர் முடிவுக்கு ஆசைப்படும் ட்ரம்ப்; மனசு வைக்காத ஈரான் - ட்ரம்பிற்கு 'தேர்தல் பயம்'?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானில் போர் தொடங்கியது வேண்டுமானால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஷ்டத்திற்கு தொடங்கியது இருக்கலாம். ஆனால், முடிவு அவர் விரும்புவதுப் போல அமையாது போலும். ஈரான் அணு ஆயுதத் தயாரி... மேலும் பார்க்க

‘பாட்டிலுக்கு 10 ரூபாயை ஒழிக்க வேண்டியது ஏன்?’ – டாஸ்மாக் ஊழியர்களிடம் அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து நேற்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் விக்னேஷ், “பார் நடத்துபவர்களை எந்தெ... மேலும் பார்க்க

'சீருடையும், ஐ.டியும் போதும்' புதிய பஸ் பாஸ் வரும் வரை அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சலுகை!

'புதிய பயண அட்டை' வழங்கப்படுவதற்கு முன்பு, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் ... மேலும் பார்க்க

'இன்னும் இந்தியாவின் 13 கப்பல்கள் ஹார்முஸில் நிற்கிறது; மீதி.!' - மத்திய அரசு சொல்லும் தகவல்

ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆகிவிட்டன. தற்காலிக போர் நிறுத்தத்தால், என்ன தான் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாறி மாறி பெருமளவில் தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும், ஹார்முஸ் நீர்சந்... மேலும் பார்க்க

"பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த நான் காரணமா?" ஆவேசமான வி.டி.சதீசன்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி மற்றும் எக்ஸாலஜிக் நிறுவனத்துக்கு இடையேயான பண பரிவர்த்தனை சம்பந்தமாக கடந்த 27-ம் தேதி அமலாக்கத்துறை கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடத்தியது. அது ப... மேலும் பார்க்க