Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup...
கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்
கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் வைத்து ஹர்ஷவர்தன் மாணவியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், ஹர்ஷவர்தன் மற்றும் மாணவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. கல்லூரியில் மற்ற மாணவர்களுடன் பேசக்கூடாது என்று ஹர்ஷவர்தன் மிரட்டியுள்ளார்.

இன்று அவர்களிடையே வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் அவர் மாணவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மாணவியின் கழுத்து, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஹர்ஷவர்தன் அந்த மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவி, ஹர்ஷவர்தன் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதே கோவையில் நடைபெற்றுள்ள மற்றொரு சம்பவம் மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



















