செய்திகள் :

‘கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்குக’ – வானதி சீனிவாசன் கோரிக்கை

post image

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு நேற்று அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையில் இப்பணி வழங்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்வதற்காக, கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இதில் உயிரிழந்தவர்கள் யாரும் எந்தத் தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள். வழக்கம் போல கடைத் தெருவுக்கு வந்தவர்கள். அவர்களில் பலர் குடும்பத்தின் ஒற்றை ஆதாரமாக விளங்கியவர்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறியாத, குண்டுவெடிப்பை முன்கூட்டிய கண்டறிந்த தடுக்காத உளவுத் துறை மற்றும் காவல் துறையின் தோல்வியால் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளனர்.

அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசின் கருணைப் பார்வை, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் விழாமல், பாதிக்கப்பட்ட அனைவர் மீது விழ வேண்டும். எனவே, கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்திற்கு அரசு பணி வழங்கியபோது தடுக்காதது ஏன்?' - செங்கோட்டையன்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் விதமாக கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து ... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டில் ஒரு வாரம் கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்?' - வணிகர்கள் கூட்டமைப்பின் தீர்மானம் என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட கோழி வணிக... மேலும் பார்க்க

`3,084 ஏக்கர் கோயில் நிலமா? பாஜக-வின் அப்பட்டமான பொய்; இதுதான் நடந்தது..!'- எம்.பி ஜோதிமணி விளக்கம்

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆ... மேலும் பார்க்க

'ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்' - முதல்வர் விஜய் பேச்சு குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட, அதைப் புறக்கணித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீண்ட இடைவெளிக்கு பின், சென்னையில... மேலும் பார்க்க

``வாடகை சக்திகளின் துணையில் ஆட்சி நடத்துகிறார் விஜய்!" - அதிமுக எம்.பி இன்பதுரை காட்டம்

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதில் தவறு கிடையாது. சுமுகமான உறவுடன் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி தெரிவித்திருக்கிறார்.நெல்லையில் ம... மேலும் பார்க்க

’பாஜகவை எதிர்த்து எந்த கட்சியும் இப்போது பேசுவதில்லை’- மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

கோவை சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்... மேலும் பார்க்க