செய்திகள் :

கோவை: கூண்டில் சிக்காமல் போக்கு காட்டிய காட்டுப்பன்றிகள்; சுட்டுக் கொன்ற வனத்துறை

post image

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்துவது அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். காட்டுப்பன்றிகள் கிராமப்பகுதிகள் மட்டுமின்றி பி.என். புதூர், கோவைப்புதூர் உள்ளிட்ட நகரப்பகுதிகளிலும் சுற்றித் திரிகின்றன.

வனப்பகுதியில் வெளியே வந்த ஒரு காட்டுப்பன்றிக் கூட்டம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பி.என்.புதூரில் தங்கி விட்டது. இனப்பெருக்கம் காரணமாக காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. இதனால் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்ததால், அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்று வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து காட்டுப்பன்றிகளைப் பிடிக்க முயன்றனர். ஆனால் காட்டுப்பன்றிகள் ஓராண்டிற்கும் மேலாக கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது.

காட்டுப்பன்றிகள்
காட்டுப்பன்றிகள்

மேலும், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அப்பகுதி மக்களுக்கு இடையூறும் அதிகரித்து வந்தது. இதனால் காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பி.என்.புதூர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சிக்காமல் போக்குகாட்டி வந்த 3 காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து உயிரிழந்த மூன்று காட்டுப்பன்றிகளும் அரசு விதிகளுக்குட்பட்டு கிராம நிர்வாக அலுவலர், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் முன்னிலையில் மருதமலை வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. மற்ற காட்டுப்பன்றிகளைப் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Ooty: பூச்சிகளால் முடங்கும் இயல்பு வாழ்க்கை; கடையடைப்பு போராட்டம்; என்ன நடக்கிறது ஊட்டியில்?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் புதிதாக பூச்சியினம் ஒன்று குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. ஒவ்வொரு வீடுகளிலும் லட்சக்கணக்கில் படையெடுக்கும் ... மேலும் பார்க்க

கருமந்தி: மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர் வனத்தில் அரிதாக காணப்படும் கருங்குரங்குகள் | Photo Album

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கருங்குரங்குகள்கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கர... மேலும் பார்க்க

Kurinji: 'நீலக் கம்பளம் விரித்தார் போல்...' - பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்!

நீலக்குறிஞ்சி மலர்கள் (Strobilanthes)‌ மலையெங்கும் பூத்துக்குலுங்கி நீல நிறத்தில் காட்சியளிப்பதாலேயே நீலகிரி என்று காரணப்பெயரை கொண்டிருக்கிறது நீலகிரி மலை. குறிஞ்சி மலையான இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பூக்... மேலும் பார்க்க

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் அதிகளவில் அரிதான நீர் வாத்துகள் | Photo Album

கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வ... மேலும் பார்க்க

திருச்சி தீரன்நகர்: குவியும் குப்பை... பாழாகும் கோரையாறு - சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு காணப்படுமா?

திருச்சி தீரன்நகர் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியை முக்கிய சாலையுடன் இணைக்கும் பாலம், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கும், அருகிலுள்ள தமிழ்நாடு அரசு பஸ் டிப்போ... மேலும் பார்க்க

ஜவ்வாது மலை: அதானி மின் திட்டம்; ஒன்றிய அரசு அனுமதி! - பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம்,... மேலும் பார்க்க