செய்திகள் :

கோவை: ’கோட்டையில் கோட்டை விட்ட அதிமுக’ – 30 ஆண்டுகளுக்குப் பிறகு படுதோல்வி; எத்தனை வென்றது TVK?

post image

1974ம் ஆண்டு கோவை மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல் சட்டமன்ற உறுப்பினராக அரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டார்.

அன்று முதல் அ.தி.மு.க. பலம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாக கோவை மாவட்டம் இருந்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைத் தவிர, மற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க-வை கோவை கைவிட்டதே இல்லை.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த போதும், கோவை மாவட்டத்தில் பத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் அ.தி.மு.க-வின் கோட்டையாக கோவை கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட த.வெ.க, கிணத்துக்கடவு, சூலூர், கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய 6 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.

கோவை தெற்கு, வால்பாறை ஆகிய தொகுதிகளில் தி.மு.க-வும், பொள்ளாச்சியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட கொ.ம.தே.க-வும் வெற்றி பெற்றன. ஆனால் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

குறிப்பாக முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோரும் தோல்வியை தழுவியுள்ளனர்.

சூலூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, கோவை வடக்கு ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. இரண்டாம் இடத்திற்கும், மேட்டுப்பாளையம், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

இது அ.தி.மு.க-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அ.தி.மு.க, 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் படுதோல்வியைப் சந்தித்துள்ளது.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க