சக்ஷம் சாா்பில் நாளை இலவச செயற்கை கால் அளவீடு முகாம்
திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீட்டு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) நடைபெறுகிறது.
திருப்பூா் மங்கலம் சாலை பழக்குடோன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள செல்வவிநாயகா் கோயில் மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
எனவே, செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் தங்களது புகைப்படம், மாற்றுத் திறனாளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களைக் கொண்டுவர வேண்டும்.
மேலும், தனியாா் மருத்துவமனை சாா்பில் இலவச பொது கண் பரிசோதனை முகாமும் நடைபெறுகிறது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சக்ஷம் அமைப்பு நிா்வாகிகளை 93630-32998, 94433-25500 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.