செய்திகள் :

`சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' - அண்ணாமலை

post image

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “சீன அரசின் அனுமதி பெற்று நேபாளம் வழியாக கைலாஷ் மான்சரோவர் யாத்திரைக்கு தமிழகத்திலிருந்து ஈரோடு, கரூர், ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சென்றிருந்தனர். கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சென்ற 73 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள் மற்றும் குடிவரவு சோதனைச் சாவடி உள்ளிட்டவை கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

இரு நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதி என்பதால் தகவல் தொடர்பிலும், மீட்புப் பணிகளிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக சிறப்பு மீட்புக் குழுவை அனுப்பி, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தோரின் உடல்களைத் தாயகம் கொண்டுவரவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரிகளில் மாணவர் பேரவை மற்றும் முறையான தேர்தல்களை ஊக்குவிக்க வேண்டும். திரைப்படத் தணிக்கை விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். திரையரங்குகளில் வயது வரம்புச் சான்றிதழ் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டும். ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குச் சமூக வலைதளப் பயன்பாட்டை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய சட்டங்கள் தேவை. சமூக வலைதள அடிமைத்தனத்தால் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது.

'வீ தி லீடர்ஸ்' இயக்கம் சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கில் இதுவரை 8 லட்சம் மரங்கள் நடப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.போதைப்பொருள் ஒழிப்பில் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அதன் தேவையை முற்றிலுமாக ஒழிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். சட்டமன்றம் என்பது ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அது தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க