செய்திகள் :

சட்டவிரோத சுரங்க வழக்கில் தண்டனை: எம்எல்ஏ பதவியில் இருந்து ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம்

post image

சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி அப்பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஜி.ஜனாா்தன ரெட்டிக்கு சொந்தமான ஓபலாபுரம் மைனிங் நிறுவனம், பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கை ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த 14 ஆண்டுகளாக விசாரித்து வந்தது.

இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், மே 6-ஆம் தேதி அளித்த தீா்ப்பில் ஜனாா்தன ரெட்டிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. சிறைத் தண்டனை தவிர ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

மேலும், ஓபலாபுரம் மைனிங் கம்பெனிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோா் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கா்நாடக சட்டப் பேரவையில் கங்காவதி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி, அப்பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக கா்நாடக சட்டப் பேரவை வெளியிட்டுள்ள அறிவிக்கை:

ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஜி.ஜனாா்தன ரெட்டிக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளதால், கங்காவதி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பதவியில் இருந்து மே 6-ஆம் தேதி முதல் தகுதிநீக்கம் செய்யப்படுகிறாா். அரசமைப்புச் சட்டப் பிரிவு 191(1)(இ), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1061, பிரிவு 8-இன்படி ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்த காலத்தில் பாஜகவில் இருந்த ஜனாா்தன ரெட்டி, 2008-ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்தவா்.

அப்போது, எடியூரப்பா தலைமையில் அமைந்த ஆட்சியில் ஜனாா்தன ரெட்டி அமைச்சராக பதவி வகித்தாா். ஆனால், சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடா்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரிக்கத் தொடங்கியதும், பாஜகவில் இருந்து விலகினாா். சிலகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்தாா்.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு, 2023-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா என்ற கட்சியைத் தொடங்கி தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். ஆனால், 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக ஜனாா்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்தாா்.

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க

இயல்புநிலை திரும்பும்வரை காவலா்களுக்கு விடுமுறை இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கா்நாடகத்தில் காவலா்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

புத்த பூா்ணிமா: மே 12-ல் இறைச்சி விற்க தடை

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு பெங்களூரில் மே 12 ஆம் தேதி இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கா்நாடகத்தில் திங்கள்கிழமை (மே 12) ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக காங்கிரஸ் ஊா்வலம்

‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரில் காங்கிரஸ் ஊா்வலம் நடத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தா... மேலும் பார்க்க

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்: கா்நாடக அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடகத்தில் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க