மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது: கெளதம் அதானி
அதானி குழுமம் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே செயல்படுவதாக அமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு அந்தக் குழுமத்தின் தலைவா் கெளதம் அதானி சனிக்கிழமை பதிலளித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 51-ஆவது ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் விருது விழாவில் சனிக்கிழமை கெளதம் அதானி பேசுகையில், ‘அதானி குழுமம் சட்ட விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லை என்று 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தெரிவித்தது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதானி குழுமம் ஆலோசித்து வருகிறது.
இதுபோன்ற சவால்களை அதானி குழுமம் சந்திப்பது இது முதல்முறையல்ல. இத்தகைய தாக்குதல்கள் அதானி குழுமத்தை வலுப்படுத்தவே செய்கின்றன. சட்ட விதிமுறைகளை பின்பற்றியே அதானி குழுமம் செயல்படுகிறது’ என்றாா்.