திருச்சி திமுக மாநாடு: சுட சுட பிரியாணி பார்சல்கள்; பரபரக்கும் பணிகள் - கிட்சன் ...
சமையல் சூப்பர் ஸ்டார்: சட்னி சாதம், ரவா பனீர் கீர், மாங்காய் சம்மந்தி! அசத்திய ஈரோடு போட்டியாளர்கள்!
ஈரோட்டில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிறைவு பெற்றது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த 244 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாங்கள் வீட்டில் இருந்து சமையல் செய்து எடுத்து வந்த உணவுகளை முதல் சுற்றில் காட்சிப்படுத்தினர். தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள பிரபலமான செஃப் தீனா நிகழ்ச்சி நடுவராக பங்கேற்றார்.

போட்டியாளர்கள் முதல் சுற்றில் காட்சிப்படுத்திய உணவுகளை செஃப் தீனா சுவைத்து பார்த்து மதிப்பெண் வழங்கினார். உணவின் சுவை, அதன் ஆரோக்கிய பயன்கள், டிஸ்ப்ளே செய்த முறை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டன. அந்த வகையில் முதல் சுற்றில் அதிக மதிப்பெண் பெற்ற சந்தரபிரபா, சரண்யா பொன்குமார், சர்மிளா பானு, சரவணன், சௌந்தர்யா. பி, ராதா, மதுமதி, பரிமளா தேவி, சசி , சுஜாதா வைஷ்ணவி ஆகிய பத்து பேரும் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டாம் சுற்றான நேரடி சமையல் போட்டியில் ஒரு மெயின் டிஷ், ஒரு கிரேவி அல்லது ஸ்டார்ட்டர் , ஓர் இனிப்பு என மூன்று வகை உணவுகளை ஒரு மணி நேரத்துக்குள் சமைக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. சமைத்து முடித்ததும் ஒரு டிஷ்ஷை டிபன் பாக்ஸிலும், மற்ற இரண்டு டிஷ்களையும் எந்தப் பாத்திரத்தில் வேண்டுமானாலும் பிளேட்டிங் பண்ண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேர்வாகிய பத்து பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆர்வமாக சமையல் செய்ய தொடங்கினர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு போட்டியாளர்கள் சமைத்த உணவை சுவை பார்த்து வெற்றியாளர்களை தேர்வு செய்தார் செஃப் தீனா.
உணவின் சுவை, டிஸ்ப்ளே செய்த விதம் ஆகியவற்றின் அடிப்படையில், கிரீன்பீஸ் பனீர் புலாவ், ஸ்வீட் பொட்டேட்டோ ஜாக்கரி அல்வா, புர்ஹானி ரைத்தா, மாங்காய் சம்மந்தி சமைத்த ஈரோட்டைச் சேர்ந்த சந்திர பிரபா, சிக்கன் மிளகு வறுவல், பனீர் மசாலா, கொங்கு சிக்கன் பிரியாணி, ரவா பனீர் கீர் சமைத்த ஈரோட்டை சேர்ந்த மதுமதி, சட்னி சாதம் மற்றும் முட்டை சுக்கா, ஹயக்ரீவர் மெட்டி ஆகியவற்றை சமைத்த கோயம்புத்தூரை சேர்த்த ராதா ஆகிய மூன்று பேரும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் சென்னையில் நடைபெறும் மாபெரும் இறுதி சுற்றில் பங்கேற்பார்கள். தேர்வு செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேரடி சமையலில் பங்கேற்ற மீதமுள்ள ஏழு நபர்களுக்கும் பாராட்டு சான்றிதழும் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன. அடுத்ததாக, வரும் மார்ச் 21, 22 தேதிகளில் சென்னையில் போட்டிய நடைபெற உள்ளது.




















